/உள்ளூர் செய்திகள்/மதுரை/சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தேவை: தமிழருவி மணியன் பேச்சுசாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தேவை: தமிழருவி மணியன் பேச்சு
சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தேவை: தமிழருவி மணியன் பேச்சு
சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தேவை: தமிழருவி மணியன் பேச்சு
சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தேவை: தமிழருவி மணியன் பேச்சு
ADDED : செப் 13, 2011 12:37 AM
மதுரை : '' நான் பலவீனமானவன் என்ற எண்ணம் வராமல், எதையும் சாதிக்க முடியும், என்ற தன்னம்பிக்கையை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என காந்திய இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
மதுரையில் எல்.ஐ.சி., முகவர் நலச்சங்க தல்லாகுளம் கிளை ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது: மனிதனில் இருந்து வெளிப்படும் வார்த்தை தான் வாழ்க்கை.
மனம் எண்ணத்தையும், எண்ணம் வார்த்தையையும், வார்த்தை செயலையும், செயல் விளைவையும் ஏற்படுத்துகிறது. பொய், அவதூறு, கடும் வார்த்தை, பயனற்ற செற்களை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திலும் சிந்திக்க வேண்டும். நம் கண் முன் காலம் கழன்று செல்கிறது. நொடிக்கு நொடி மயானம் நோக்கி வாழ்க்கை நகர்கிறது என்பதை, உணரவேண்டும்.நாம் நாமாக இல்லாமல் முகமூடி அணிந்த வாழ்க்கை வாழ்கிறோம். மனைவி, அதிகாரி, நண்பன் என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முகத்தை வெளிப்படுத்துகிறோம்.
இது தேவையற்றது. எந்த சூழ்நிலையிலும் நாம் நாமாகவே இருக்க வேண்டும். அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.சொல்லை தேடு, சொல்லை அறி, சொல்லை சொல்லால் பின்பற்ற வேண்டும். உலக மொழிகளில் அதிக வார்த்தை தமிழ்மொழில் தான் உள்ளது. நான் பலவீனமானவன் என ஒருபோதும் கருதக்கூடாது. எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அனைவர் மனதிலும் ஏற்பட வேண்டும், என்றார்.சங்க தலைவர் சையது கனி மற்றும் நிர்வாகிகள் தனசேகரன், நாகேந்திரன், விஸ்வநாதன், மாவட்ட நிர்வாகிகள் மாசானம், பரமசிவம், அண்ணாமலை, ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.