/உள்ளூர் செய்திகள்/சென்னை/பாதியில் நிறுத்தப்பட்ட மகளிர் போலீஸ் நிலையம் கட்டுமானப்பணி மகளிர்போலீசார்அவதிபாதியில் நிறுத்தப்பட்ட மகளிர் போலீஸ் நிலையம் கட்டுமானப்பணி மகளிர்போலீசார்அவதி
பாதியில் நிறுத்தப்பட்ட மகளிர் போலீஸ் நிலையம் கட்டுமானப்பணி மகளிர்போலீசார்அவதி
பாதியில் நிறுத்தப்பட்ட மகளிர் போலீஸ் நிலையம் கட்டுமானப்பணி மகளிர்போலீசார்அவதி
பாதியில் நிறுத்தப்பட்ட மகளிர் போலீஸ் நிலையம் கட்டுமானப்பணி மகளிர்போலீசார்அவதி
UPDATED : செப் 14, 2011 03:26 AM
ADDED : செப் 14, 2011 03:12 AM
சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்
கட்டும் பணி, பாதியில் நிறுத்தப்பட்டதால், எப்போது நிறைவுபெறுமோ என்ற
எதிர்பார்ப்பில் போலீசார் உள்ளனர்.ஸ்ரீபெரும்புதூரில் அனைத்து மகளிர்
போலீஸ் நிலையம், 2001ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 12ம் தேதியிலிருந்து,
தனியார் வாடகைக் கட்டடத்தில், செயல்படத் துவங்கியது. இங்கு, இரண்டு
சப்-இன்ஸ்பெக்டர்கள், ஐந்து போலீசார் பணிபுரிகின்றனர். இன்ஸ்பெக்டர்
பணியிடம், கடந்த ஓராண்டாக காலியாக உள்ளது.
இங்கு, ஸ்ரீபெரும்புதூர்
தாலுக்காவிற்கு உட்பட்ட பொதுமக்கள் புகார் அளிக்க வருகின்றனர். வரதட்சனைக்
கொடுமை, பெண்கள் வன்கொடுமை, குடும்பப் பிரச்னை போன்றவை தொடர்பானப்
புகார்களை விசாரிக்கின்றனர். போலீஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லை.
வரதட்சனைப் புகார் மீதான விசாரணைக்கு, இரு தரப்பிலும் ஏராளமானோர்
வருகின்றனர். அவர்கள் போலீஸ் நிலையத்தில் இடம் இல்லாததால், தெருவில் நிற்க
வேண்டியுள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, அனைத்து மகளிர் போலீஸ்
நிலையத்திற்கு, சொந்தமாக கட்டடம் கட்ட, இடம் ஒதுக்கி தரும்படி, போலீஸ்
அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு. வேண்டுகோள் விடுத்தனர்.
அதை ஏற்று
மாவட்ட நிர்வாகம், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 22 சென்ட் அரசு
புறம்போக்கு நிலத்தை ஒதுக்கியது.அந்த நிலத்தில், போலீஸ் நிலையம் கட்ட 33
லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. போலீஸ் வீட்டுவசதி வாரியம் மூலம்,
டெண்டர் விடப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பணிகள் துவக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்குள் பணியை முடிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டது. புதிய
கட்டடப் பணி துவக்கப்பட்டு, அஸ்திவாரம் வரை பணி சுறுசுறுப்பாக நடந்தது.
அதன்பின் பணி நிறுத்தப்பட்டது. ஒராண்டாகியும் பணி துவக்கப்படவில்லை. புதிய
கட்டடத்திற்கு செல்லலாம், என்ற மகளிர் போலீசார் கனவு நிறைவேறாமல் உள்ளது.டி.எஸ்.பி.,கஜேந்திரகுமார் கூறும்போது, 'அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்
கட்டுமானப் பணியை, விரைவாக துவக்கி முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி, உயர்
அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் பணி துவக்கப்படும்' என்றார்.
-ஜெ.ரவி-