Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உடுமலையில் வழி மாறி வந்தஅரிய வகை பச்சோந்தி மீட்பு

உடுமலையில் வழி மாறி வந்தஅரிய வகை பச்சோந்தி மீட்பு

உடுமலையில் வழி மாறி வந்தஅரிய வகை பச்சோந்தி மீட்பு

உடுமலையில் வழி மாறி வந்தஅரிய வகை பச்சோந்தி மீட்பு

ADDED : செப் 15, 2011 11:56 PM


Google News
உடுமலை:உடுமலை அருகே தடம் மாறி வந்த அரிய வகை பச்சோந்தியினை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.உடுமலை அருகே எஸ்.வி., புரம் பகுதியில் நேற்று மதியம் 2.00 மணியளவில், ரோட்டில் ஏதோ ஒன்று ஊர்ந்த படியே செல்வதை அவ்வழியாக சென்ற மக்கள் கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது , பச்சோந்தி என தெரிய வந்தது. ரோட்டில் வாகனங்களில் அடிபடாமல் பாதுகாக்கும் வகையில், சிலர் அதை பத்திரமாக பிடித்து பாதுகாப்பாக பெட்டிக்குள் வைத்தனர். பின், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகளிடம் பச்சோந்தியினை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்,வனத்துறை அதிகாரிகள் பச்சோந்தியினை வனப்பகுதிக்குள் விட்டனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பச்சோந்தி இடத்திற்கு ஏற்றாற் போன்று உடலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட அரிய இன விலங்கினமாகும். தற்போது, இவ்வகையான விலங்கினமும் அழிந்து வரக்கூடிய நிலையில் உள்ளது.

பச்சோந்தியினை ஓணான் என நம்பி சிறுவர்கள் கல்லால் அடித்து காயப்படுத்துகின்றனர். இதனால், இந்த இனம் குறைந்துள்ளது. தற்போது, பொதுமக்கள் பிடித்துக்கொடுத்த பச்சோந்தி உடுமலை வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us