/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரூ.56 லட்சம் மோசடி; அபகரிப்பு : கேபிள் "டிவி' நிர்வாகி ஓட்டம்ரூ.56 லட்சம் மோசடி; அபகரிப்பு : கேபிள் "டிவி' நிர்வாகி ஓட்டம்
ரூ.56 லட்சம் மோசடி; அபகரிப்பு : கேபிள் "டிவி' நிர்வாகி ஓட்டம்
ரூ.56 லட்சம் மோசடி; அபகரிப்பு : கேபிள் "டிவி' நிர்வாகி ஓட்டம்
ரூ.56 லட்சம் மோசடி; அபகரிப்பு : கேபிள் "டிவி' நிர்வாகி ஓட்டம்
ADDED : ஜூலை 29, 2011 11:06 PM
திண்டுக்கல் :திண்டுக்கல்லில் 56 லட்ச ரூபாய் மோசடி வழக்கில் சிக்கிய மதுரை ஆகாஷ் கேபிள் 'டிவி' உரிமையாளர் சரணவன், வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் டி.சி.என்., கேபிள் 'டிவி' நிறுவன பங்குதாரர்கள் சங்கரநாராயணன், வெங்கடகிருஷ்ணன், மோகன்தாஸ் உட்பட 13 பேர் மாவட்ட குற்றப்பிரிவில், சில நாட்களுக்கு முன் புகார் அளித்தனர்.இதில், 'நிறுவனத்தை கூட்டாக நடத்தினோம்; 2008 ல், மதுரை ஆகாஷ் கேபிள் 'டிவி' உரிமையாளர் சரவணன் என்பவருடன், எங்களது பங்குதாரர் கோகுல்தாஸ் சேர்ந்து நிறுவனத்தை அபகரித்தனர். எங்களிடம் இணைப்பு பெற்ற 200 ஆப்பரேட்டர்களிடம் இருந்து 56 லட்ச ரூபாயை, கோகுல்தாஸ் வசூல் செய்து மோசடி செய்தார், என, கூறப்பட்டது. இதன்படி, இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் முருகன் கூறியது:ஆகாஷ் 'டிவி' உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதாக தெரிகிறது. மற்றொருவரை தேடி வருகிறோம். யாரிடம் விசாரிப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது, என்றார்.