வக்பு வாரிய சொத்துக்கள் அபகரிப்பு: தி.மு.க.,செயலர் உறவினரை கண்டித்து போராட்டம்
வக்பு வாரிய சொத்துக்கள் அபகரிப்பு: தி.மு.க.,செயலர் உறவினரை கண்டித்து போராட்டம்
வக்பு வாரிய சொத்துக்கள் அபகரிப்பு: தி.மு.க.,செயலர் உறவினரை கண்டித்து போராட்டம்
ADDED : ஜூலை 11, 2011 03:36 PM

திருநெல்வேலி:நெல்லை மாவட்ட தி.மு.க.,செயலாளரின் உறவினர் ஆக்கிரமித்துள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்ககோரிகலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி டவுன் பேட்டையில் நவாப் வாலாஜா பள்ளிவாசலுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
இவற்றை குத்தகைக்கு நிர்வகித்து வந்த மீரான்பார்தி என்பவர் சில ஆண்டுகளுக்குமுன்பு கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு பள்ளி வாசல் சொத்துக்களை நெல்லை தி.மு.க.,செயலாளர் கருப்பசாமிபாண்டியனின்
சம்பந்தியான ஸ்டாலின்பாண்டியன் என்பவர் நிர்வகித்துவருகிறார். ஆனால் பள்ளிவாசலுக்கு பாத்தியப்பட்ட
சொத்துக்களில் இருந்து மாதம்தோறும் வரவேண்டிய ஒரு லட்சம் ரூபாய் வருமானத்தை தராமல் மோசடி செய்துவருகுடறார். சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்துள்ளார். எனவே அவற்றை மீட்டு வக்பு வாரியத்திற்கு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து நேற்று மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாநில தலைவர் ரபீக் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் கலெக்டர் நடராஜனிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனு குறித்து ரபீக் கூறுகையில், இதே பிரச்னையில்கடந்த ஆட்சியின் போது போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் போலீசார் எங்களை தடியடி நடத்தி கலைத்தனர். கருப்பசாமிபாண்டியன் உறவினர் என்பதால் வருவாய்துறையினரும், போலீசும் அவருக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதே பிரச்னையில் நெல்லையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, வக்பு வாரிய சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். எனவே வக்பு வாரியத்திற்கு சேரவேண்டிய பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை கொடுத்துள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால் வரும் 24ம் தேதி 'கரசேவை' என்ற பெயரில் பள்ளிவாசல் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். கலெக்டர் அலுவலகத்திற்குள் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்ற நிலையில் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி தனித்தனியாக கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து நூற்றுக்கணக்கானோர் போராடிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.