Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விஜயகாந்த் இல்லாதது அ.தி.மு.க.,விற்குத்தான் பாதிப்பு :பிரேமலதா பேச்சு

விஜயகாந்த் இல்லாதது அ.தி.மு.க.,விற்குத்தான் பாதிப்பு :பிரேமலதா பேச்சு

விஜயகாந்த் இல்லாதது அ.தி.மு.க.,விற்குத்தான் பாதிப்பு :பிரேமலதா பேச்சு

விஜயகாந்த் இல்லாதது அ.தி.மு.க.,விற்குத்தான் பாதிப்பு :பிரேமலதா பேச்சு

ADDED : அக் 06, 2011 01:17 AM


Google News
சிதம்பரம் : ''அழையா விருந்தாளியாக சென்று அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைக்க விஜயகாந்துக்கு அவசியமில்லை'' என பிரேமலதா பேசினார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் நகர மன்றம், பேரூராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிடும் தே.மு.தி.க., மற்றும் மா.கம்யூ., வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியதாவது: தமிழகம் முழுவதும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. இவைகளை ஒழிப்போம் என்று கூறிய ஒரே தலைவர் விஜயகாந்த். நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் உங்கள் பகுதி முன்னேறும். பண பலத்தால் மக்களை வாங்கும் அரசியல் நிலைமை தமிழகத்தில் உள்ளது. மா.கம்யூ., ஊழல் இல்லாத மக்களுக்காக போராடுகிற இயக்கம். அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்தோம். தி.மு.க., எனும் கூட்டத்தை வீழ்த்த மக்களின் விருப்பத்தின்படி கூட்டணி வைத்தோம். ஆனால் அழையா விருந்தாளியாக அங்கு செல்வதற்கு விஜயகாந்துக்கு அவசியம் கிடையாது. அ.தி.மு.க., வில் இல்லாதது விஜயகாந்த்துக்கு பாதிப்பு இல்லை, அ.தி.மு.க., விற்குத்தான் பாதிப்பு. தற்போது தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க்களுடன் வளர்ந்துள்ளது. இன்று எதிர்கட்சி, நாளை தமிழக முதல்வராக விஜயகாந்த் நிச்சயம் வருவார். இவ்வாறு பிரேமலதா பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us