/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நந்தனார் பள்ளி விடுதியில் ஆர்.டி.ஓ., ஆய்வுநந்தனார் பள்ளி விடுதியில் ஆர்.டி.ஓ., ஆய்வு
நந்தனார் பள்ளி விடுதியில் ஆர்.டி.ஓ., ஆய்வு
நந்தனார் பள்ளி விடுதியில் ஆர்.டி.ஓ., ஆய்வு
நந்தனார் பள்ளி விடுதியில் ஆர்.டி.ஓ., ஆய்வு
ADDED : ஆக 07, 2011 01:43 AM
சிதம்பரம் : சிதம்பரம் நந்தனார் பள்ளி விடுதியின் சீர்கேடுகளை களைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆர்.டி.ஓ., இந்துமதி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.சிதம்பரம் அரசு நந்தனார் பள்ளி விடுதியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் அமைச்சர்கள் சம்பத், செல்வி ராமஜெயம் ஆகியோர் கடந்த 2ம் தேதி அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமையில் நந்தனார் பள்ளியில் விடுதி ரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, ஆதிதிராவிட நல அலுவலர் திருவேங்கடம், நகராட்சி கமிஷனர் மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பிறகு விடுதியை பார்வையிட்ட ஆர்.டி.ஓ., விடுதியில் குடிநீர் வசதி, விளக்கு வசதி, கதவு, ஜன்னல் சீரமைப்பு, வர்ணம் பூசுவது, கழிப்பிட வசதி சீரமைப்பு, மின் விசிறி வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் செய்வது குறித்து அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.