/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கைதுகடலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கைது
கடலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கைது
கடலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கைது
கடலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கைது
ADDED : செப் 23, 2011 02:12 AM
திட்டக்குடி:கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் அலோபதி சிகிச்சை அளித்த போலி
டாக்டர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுவதும்
டாக்டருக்கு படிக்காமலேயே அலோபதி மருத்துவம் செய்வதாக அரசுக்கு பல
புகார்கள் வந்தது.
அதையொட்டி போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய தமிழக
அரசு உத்தரவிட்டது. இதன்படி கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் பல்வேறு
இடங்களில் போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.நேற்று கடலூர்
மாவட்டத்தில் புவனகிரியை அடுத்த பெரியமேடு கிராமத்தில் டாக்டருக்கு
படிக்காமல் அலோபதி சிகிச்சை மேற்கொண்ட அறிவழகன்(55). சேத்தியாதோப்பை அடுத்த
வளையமாதேவியில் கல்யாணசுந்தரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும்
கடலூர் முதுநகர், புதுநகர் ஆகிய இடங்களில் சிகிச்சை அளித்த இரண்டு பேரை
விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல திட்டக்குடி, ராம நத்தம் பகுதியில்
அலோபதி சிகிச்சை அளித்த இரண்டு டாக் டர்கள் கைது செய்யப்பட்டனர்.