/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கூட்டுறவு சங்கங்களில் ரூ.55 கோடி கடன் வழங்க இலக்குகூட்டுறவு சங்கங்களில் ரூ.55 கோடி கடன் வழங்க இலக்கு
கூட்டுறவு சங்கங்களில் ரூ.55 கோடி கடன் வழங்க இலக்கு
கூட்டுறவு சங்கங்களில் ரூ.55 கோடி கடன் வழங்க இலக்கு
கூட்டுறவு சங்கங்களில் ரூ.55 கோடி கடன் வழங்க இலக்கு
ADDED : ஆக 07, 2011 01:53 AM
ஊட்டி : 'நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு 75 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 55 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,' என இணை பதிவாளர் தயாளன் தெரிவித்தார்.ஊட்டியில் நடந்த மாவட்ட 75 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் ஆய்வு கூட்டத்தில் இணை பதிவாளர் தயாளன் பேசுகையில்,''விவசாய கடன் வழங்க உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தவணை தவறிய கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு 75 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 55 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார். கூட்டத்தில் விவசாய கடன், பண்ணை சாரா கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்குதல் மற்றும் வசூல் செய்தல் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் டெபாசிட் சேகரிப்பு முகாம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. துணை பதிவாளர் ஜீவா, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் சொர்னலட்சுமி, பொதுமேலாளர் மணி, கடன் மேலாளர் விஸ்வநாதன், துறை அலுவலர்கள், கூட்டுறவு கடன் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.