/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மத்திய கூட்டுறவு வங்கியில் அயல் பணி கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கைமத்திய கூட்டுறவு வங்கியில் அயல் பணி கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை
மத்திய கூட்டுறவு வங்கியில் அயல் பணி கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை
மத்திய கூட்டுறவு வங்கியில் அயல் பணி கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை
மத்திய கூட்டுறவு வங்கியில் அயல் பணி கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 26, 2011 11:08 PM
கடலூர் : மத்திய கூட்டுறவு வங்கிகளில் அயல் பணியாக பணிபுரியும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களில் மாநில கூட்டமைப்பின் கூட்டம் கடலூரில் நடந்தது.
சீனுவாசன் தலைமை தாங்கினார். செல்வகுமார் முன்னிலை வகித்தார். அண்ணா தொழிற்சங்க கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் பாலகிருஷ்ணன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெ.,விற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மத்திய கூட்டுறவு வங்கிகளில் அயல் பணியில் பணிபுரியும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களை பணிவரன் முறை செய்து வங்கி ஊழியர்களாக அறிவிக்க முதல்வரிடம் கோரிக்கை வைப்பது. சங்க உறுப்பினர்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்வது. சங்க நிர்வாகிகள் தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.