Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நிலத்தடி நீர் மட்டம்: நாமக்கல் மாவட்டம், "டாப்':தஞ்சை மாவட்டம் படு குறைவு

நிலத்தடி நீர் மட்டம்: நாமக்கல் மாவட்டம், "டாப்':தஞ்சை மாவட்டம் படு குறைவு

நிலத்தடி நீர் மட்டம்: நாமக்கல் மாவட்டம், "டாப்':தஞ்சை மாவட்டம் படு குறைவு

நிலத்தடி நீர் மட்டம்: நாமக்கல் மாவட்டம், "டாப்':தஞ்சை மாவட்டம் படு குறைவு

ADDED : செப் 22, 2011 01:06 AM


Google News

சென்னை;கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தும், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் குறைந்தும் உள்ளது.

அதிகபட்சமாக, நாமக்கல் மாவட்டத்தில், நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 15.84 மீட்டர் உயர்ந்துள்ளது. இதே கால கட்டத்தில் அதிகபட்சமாக, தஞ்சை மாவட்டத்தில், நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 13.57 மீட்டர் குறைந்துள்ளது.



மத்திய நீர்வள அமைச்சகம் சார்பில், 2001ம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த மே மாதம் வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 1,161 இடங்களில் நடந்த இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.



அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த பத்தாண்டுகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிலத்தடி நீர் மட்டம், 77 சதவீத இடங்களில் உயர்ந்தும், 23 சதவீத இடங்களில் குறைந்தும் உள்ளது. சென்னை, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 2 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை உயர்ந்துள்ளது.கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 4 மீட்டருக்கு மேல் அதிகரித்துள்ளது.



அதிகபட்சமாக, நாமக்கல் மாவட்டத்தில், 15.84 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நிலத்தடி நீரின் அளவு சராசரியாக 2.09 மீட்டர் உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம், நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில், சராசரியாக 2 மீட்டர் முதல் 4 மீட்டர் வரையிலும், நெல்லை, கடலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் 4 மீட்டருக்கு மேலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, தஞ்சை மாவட்டத்தில், 13.57 மீட்டர் அளவிற்கு நீர் மட்டம் குறைந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நமது சிறப்பு நிருபர்



மாவட்ட வாரியாக நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்:



மாவட்டம் அதிகபட்ச உயர்வு(மீ)

சென்னை 3.31

கோவை 13.92

தர்மபுரி 10.55

திண்டுக்கல் 6.81

ஈரோடு 10.16

கன்னியாகுமரி 5.14

கரூர் 5.00

மதுரை 3.45

நாமக்கல் 15.84

நீலகிரி 11.59

பெரம்பலூர் 3.25

புதுக்கோட்டை 2.17

ராமநாதபுரம் 3.36

சேலம் 7.85

சிவகங்கை 3.79

தேனி 5.35

திருச்சி 6.55

திருவள்ளூர் 3.46

திருவண்ணாமலை 4.82

திருவாரூர் 2.39

வேலூர் 5.54

விழுப்புரம் 6.06

விருதுநகர் 4.21



மாவட்டம் அதிகபட்ச குறைவு(மீ)

கடலூர் 7.46

காஞ்சிபுரம் 3.84

நாகை 2.13

தஞ்சை 13.57

நெல்லை 6.59

தூத்துக்குடி 2.99







      Our Apps Available On




      Dinamalar

      Follow us