/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேயர் பதவிக்கு 24 பேர் போட்டி: ஓட்டுப்பதிவுக்கு இரண்டு மிஷின்மேயர் பதவிக்கு 24 பேர் போட்டி: ஓட்டுப்பதிவுக்கு இரண்டு மிஷின்
மேயர் பதவிக்கு 24 பேர் போட்டி: ஓட்டுப்பதிவுக்கு இரண்டு மிஷின்
மேயர் பதவிக்கு 24 பேர் போட்டி: ஓட்டுப்பதிவுக்கு இரண்டு மிஷின்
மேயர் பதவிக்கு 24 பேர் போட்டி: ஓட்டுப்பதிவுக்கு இரண்டு மிஷின்
சேலம்: சேலம் மேயர் தேர்தலுக்கு மனு அளித்தவர்களில், ஏழு பேர் நேற்று வாபஸ் பெற்றதையடுத்து, தேர்தல் களத்தில், 24 பேர் உள்ளனர்.
சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு மனு கொடுத்த லட்சுமணன், ஈஸ்வரன், கதிர் ராசரத்தினம், சாதிக் பாஷா, சீதாலட்சுமி ரவிவர்மா, ஸ்வர்ணலதா ஆகியோர் நேற்று வாபஸ் பெற்றனர். இதையடுத்து மேயர் தேர்தலுக்கான போட்டியில், கலையமுதன்(தி.மு.க.,), சவுண்டப்பன்(அ.தி.மு.க.,), இளங்கோவன்(தே.மு.தி.க.,.), அருள்(பா.ம.க.,), விஜயவர்மன்(காங்.,), ராமச்சந்திரன்(ம.தி.மு.க.,), ரமேஷ்(பா.ஜ.,), ஜெயசீலன்(விடுதலை சிறுத்தைகள்), அகமது ஷாஜகான்(பகுஜன் சமாஜ் கட்சி), சிவா(ஐ.ஜே.கே.,) ஆகியோர் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். சுயேட்சைகளாக சசிக்குமார், சந்திரசேகரன், சபரிமுத்து, சிவப்பிரகாசம், செல்வம், தங்கம், தேவராஜ், பழனிகணேசன், பாலகிருஷ்ணன், மதுரைவீரன், மாதுராஜ், ரஷீத்துன்னிசா, ஜானகிராமன், அப்துல்ஜப்பார் ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
சேலம் மாநகராட்சி மேயர் தேர்தல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் நடத்தப்படுகிறது. கவுன்சிலர் மற்றும் மேயர் தேர்வுக்கு தனித்தனியே ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், கண்ட்ரோலர்களும் அமைக்க வேண்டும். ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சம் 16 வேட்பாளர்களின் பெயர்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதால், வரும் மேயர் தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும், இரண்டு ஓட்டு மிஷின் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


