Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போதையால் பெண்ணிடம் எல்லை மீறல் : தடுக்கச் சென்ற எஸ்.ஐ.,க்கு கத்திவெட்டு

போதையால் பெண்ணிடம் எல்லை மீறல் : தடுக்கச் சென்ற எஸ்.ஐ.,க்கு கத்திவெட்டு

போதையால் பெண்ணிடம் எல்லை மீறல் : தடுக்கச் சென்ற எஸ்.ஐ.,க்கு கத்திவெட்டு

போதையால் பெண்ணிடம் எல்லை மீறல் : தடுக்கச் சென்ற எஸ்.ஐ.,க்கு கத்திவெட்டு

ADDED : ஆக 01, 2011 02:51 AM


Google News

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே போதை தலைக்கேறி பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றவரை தடுக்கச் சென்ற சப் இன்ஸ்பெக்டருக்கு கத்தி வெட்டு விழுந்தது.

பரங்கிப்பேட்டை அடுத்த புதுச்சத்திரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் தனசேகரன், 34; இவர் வீட்டுடன் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி வெளியூர் சென்றுள்ளார். தனசேகரன் நேற்று குடிபோதையில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பால் கொடுக்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த பராசக்தி என்ற பெண்ணின் கையை பிடித்து இழுத்து கதவை மூடிக் கொண்டு தகாத முறையில் நடக்க முயன்றார். பராசக்தி அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால், தனசேகரன் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து அவர்களைத் தாக்கினார். தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் நாகூரான் சம்பவ இடத்திற்குச் சென்று தடுக்க முயன்றபோது அவரை கத்தியால் தலையில் வெட்டினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனசேகரனை பிடித்து தர்மஅடி கொடுத்து பராசக்தியை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடமிருந்து தனசேகரனை மீட்டு, காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் நாகூரானை சிதம்பரம் அர” மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பராசக்தி கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிந்து தனசேகரனை கைது செய்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us