ADDED : ஆக 01, 2011 10:08 PM
அவிநாசி : சேவூரில் நேற்று நடந்த ஏலத்துக்கு நிலக்கடலை வரத்து சற்று அதிகரித்திருந்தது.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு 350 மூட்டை வரத்தாக இருந்தது. இது, கடந்த வாரத்தை விட, 50 மூட்டை அதிகம். ஆடிப்பெருக்கு பண்டிகை நெருங்கியுள்ளால் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. வரத்து அதிகரித்திருந்தாலும் கூட, கடந்த வாரத்தை விட, அனைத்து ரகங்களும் குவிண்டாலுக்கு ரூ.250 வரை குறைவாக ஏலம் போனது. நேற்று நிலக்கடலை (காய்ந்தது) முதல் ரகம் குவிண்டாலுக்கு ரூ.3,420 முதல் 3.630 வரை, இரண்டாம் ரகம் ரூ.3,100 முதல் 3,360 வரை, மூன்றாம் ரகம் ரூ.2,550 முதல் 2,850 வரை விலை போனது.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) மகேந்திரசிங் கூறுகையில், ''ஆடிப்பெருக்கு நெருங்கியுள்ளதால், அறுவடை ஆரம்பித்துள்ளது. இனி வரும் வாரங்களில் வரத்து அதிகரிக்கும். நேற்றைய ஏலத்தில், 59 விவசாயிகள், ஒன்பது வியாபாரிகள் பங்கேற்றனர். ரூ.4.72 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது,'' என்றார்.