/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மொபைலில் "பிலிம்' காட்டிய இருவர் கைதுமொபைலில் "பிலிம்' காட்டிய இருவர் கைது
மொபைலில் "பிலிம்' காட்டிய இருவர் கைது
மொபைலில் "பிலிம்' காட்டிய இருவர் கைது
மொபைலில் "பிலிம்' காட்டிய இருவர் கைது
ADDED : ஆக 14, 2011 10:50 PM
கோவை : பெண்களின் ஆபாசப் படங்களை மொபைல் போனில் 'டவுன் லோடு' செய்து கொடுத்து, பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை சுந்தராபுரத்தில் உள்ள மொபைல் போன் விற்பனை மையம் ஒன்றில், பெண்களின் நிர்வாணப்படத்தை 'டவுன் லோடு' செய்து கொடுத்து, பணம் பறிப்பதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தீவிர கண்காணிப்பை மேற்கொண்ட போலீசார், தகவலை உறுதி செய்தபின் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். மொபைல் கடை உரிமையாளர்கள் முகமது இர்பான் (26), சோமசுந்தரம் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின், ஆபாச படங்களை 'டவுன்லோடு' செய்ய பயன்படுத்திய கம்ப்யூட்டர் மானிட்டர், மெமரி கார்டுகள், கார்டு ரீடர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.