ADDED : ஆக 03, 2011 12:45 AM
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய, 'யூகலிப்டஸ்' மரத்தின் மரபணு மூலக்கூறை, தென்னாப்ரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
85 மீ., உயரமுள்ள இம்மரத்தின் மரபணு அமைப்பு, மனித மரபணு மூலக்கூறில், ஐந்தில் ஒரு பங்கு நீளம் கொண்டது. குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் உள்ள, 'யூகலிப்டஸ்' மரங்களின் மூலம், உயிரி எரிபொருள் ஆராய்ச்சி செய்ய முடியும்.