Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"மாஸ்டர் பிளான்' சமர்ப்பிக்க திட்டம்

"மாஸ்டர் பிளான்' சமர்ப்பிக்க திட்டம்

"மாஸ்டர் பிளான்' சமர்ப்பிக்க திட்டம்

"மாஸ்டர் பிளான்' சமர்ப்பிக்க திட்டம்

ADDED : ஆக 12, 2011 02:06 AM


Google News

கோவை : ''கோவை 'மாஸ்டர் பிளான்' மறு ஆய்வு தொடர்பாக இதுவரை 3,000 ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.

20 நாட்களுக்குள் இந்த மனுக்கள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்,'' என, கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தின் உறுப்பினர் - செயலர் ஈஸ்வரன் தெரிவித்தார். உள்ளூர் திட்டக்குழுமத்தின் புதிய உறுப்பினர் செயலர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 10ம் தேதி காளப்பட்டி பேரூராட்சி பகுதியில் இரண்டு அனுமதியற்ற கட்டுமானங்கள், உப்பிலிபாளையம் பகுதியில் ஒரு அனுமதியற்ற கட்டுமானம், வடவள்ளி பேரூராட்சி பகுதியில் நான்கு அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்டறியப்பட்டன. இக்கட்டுமானங்களை முறைப்படுத்த, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். 2,000 சதுர அடிக்கு மேல் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கும், 4,000 சதுர அடிக்கு மேல் கட்டப்படும் குடியிருப்புக் கட்டடங்களுக்கும் உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெற வேண்டும். ஆனால் பஞ்சாயத்து நிர்வாகங்களிடம் பலர் அனுமதி பெறுகின்றனர். இந்த அனுமதி செல்லாது. விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை மீறி மனைகளை சிறு பகுதிகளாக பிரித்து சில பஞ்சாயத்து நிர்வாகங்கள் வழங்குகின்றன. கோவையில் 2011ல் அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்ட 15 கட்டடங்கள் மீதும், 2010ல் 13 கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவை முழுமைத் திட்ட(மாஸ்டர் பிளான்) மறு ஆய்வு தொடர்பாக இதுவரை 3,000 ஆட்சேபணை மற்றும் ஆலோசனைகள் வந்துள்ளன. பரிசீலனை முடிந்த 20 நாட்களில் இந்த விண்ணப்பங்கள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். கோவை திட்டக்குழும அலுவலகத்தில் திட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, 15 நாட்களுக்குள் விவரங்கள் வழங்கப்படுகின்றன. மனுதாரர்கள் தங்கள் திட்ட அனுமதி குறித்த நிலையை எளிதில் அறிந்து கொள்ள, ஒவ்வொரு வெள்ளியன்றும் நிலுவை விண்ணப்பப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, கோவை மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. முழுமைத் திட்ட மறு ஆய்வு குறித்த விவரங்களும், இது குறித்த பொதுமக்களின் ஆலோசனை மற்றும் ஆட்சேபனைப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆட்சேபங்களை நேரில் மட்டுமே தெரிவிக்க முடியும். இணையதளம் மூலம் தெரிவிக்கக் கூடாது. இவ்வாறு, ஈஸ்வரன் தெரிவித்தார். உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தை, 0422-2492700 என்ற போன் எண்ணிலும், www.coimbatore.tn.nic.in/lpa.html, www.tn.gov.in/dtcp ஆகி இணையதளங்களையும் தொடர்பு கொள்ளலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us