/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று செடல்ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று செடல்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று செடல்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று செடல்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் இன்று செடல்
ADDED : ஆக 05, 2011 03:17 AM
கடலூர் : துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் திருவிழா இன்று
நடக்கிறது.கடலூர், துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல்
திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை
அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் பரிவேட்டை,
நேற்றிரவு கரக உற்சவம் நடந்தது. 9ம் நாள் திருவிழாவாக இன்று (5ம் தேதி)
காலையில் இருந்து செடல் உற்சவம், இரவு ரத உற்சவம் நடக்கிறது.நாளை 6ம் தேதி
இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் வீதியுலா, 7ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப
உற்சவம், நடக்கிறது. 8ம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், 9ம்
தேதி இரவு 7 மணிக்கு விடையாத்தி உற்சவம் நடக்கிறது.