இந்திய கம்யூ., நிறுவனர் சி.எஸ்.சுப்ரமணியன் மறைவு
இந்திய கம்யூ., நிறுவனர் சி.எஸ்.சுப்ரமணியன் மறைவு
இந்திய கம்யூ., நிறுவனர் சி.எஸ்.சுப்ரமணியன் மறைவு
ADDED : செப் 19, 2011 01:21 AM
சென்னை :இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவரான சி.எஸ்.சுப்ரமணியன், 102 வயதில் நேற்று சென்னையில் மரணமடைந்தார்.இவரது பூர்வீகம் மயிலாடுதுறை, கும்பகோணம் சாலையில் உள்ள கோமல் கிராமம்.
இவரின் தந்தை சுந்தரம் அய்யர். பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். தாய் மீனாட்சி. இத்தம்பதியின் நான்கு மகன்களில், சி.எஸ்.சுப்ரமணியன் ஒருவர். இரண்டு சகோதரிகளும் உடன் பிறந்தவர்கள்.ஐ.சி.எஸ்., படிக்க லண்டன் சென்ற சுப்ரமணியன், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்பு ஏற்பட்டு, அக்கட்சியின், 'டெய்லி ஒர்க்கர்' பத்திரிகையில், இந்திய விவகாரங்கள் பற்றி எழுதி வந்தார். ரஷ்யப் புரட்சியின் நினைவாக, 'அக்டோபர் கிளப்' என்ற மாணவர் அமைப்பை லண்டனில் உருவாக்கினார்.ஐ.சி.எஸ்., படிப்பை முடிக்காமல், கம்யூனிஸ்ட்டாக இந்தியா திரும்பினார். தீவிர கம்யூனிஸ்ட்வாதியான நெல்லை சுந்தரய்யர், சீனிவாசராவ், ஜீவானந்தம், ஏ.எஸ்.கே., கேரலியன், கம்பம்பாடி சுந்தரய்யர் போன்றோருடன் இணைந்து, 1930ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, பலமுறை சிறைத் தண்டனை அனுபவித்தவர். ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஜுகுனாபாயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் குடியேறினார்.இறுதி மூச்சுவø,ர கம்யூனிஸ்ட்வாதியாக இருந்த சுப்ரமணியன், 'தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் வரலாறு' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.இவரது உடல், சென்னை அம்பத்தூரில் உள்ள நியு செஞ்சுரி புக் ஹவுஸ் தலைமையகத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட உள்ளது.