Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

ADDED : ஆக 11, 2011 02:28 AM


Google News
தர்மபுரி : தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் தனியாக சென்றவரிடமிருந்து நகை, பணத்தை பறித்து கொண்டு ஓடியவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

அவரை போலீஸார் கைது செய்தனர். பென்னாகரம் அடுத்த பெரும்பாலையை சேர்ந்தவர் முனியப்பன் (29). இவர் நேற்று தர்மபுரியில் உள்ள நகைக்கடையில் நான்கு பவுன் நகையை வாங்கிகொண்டு வீடு செல்வதற்காக தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக காத்திருந்தார். பின்னர் சிறுநீர் கழிப்பதற்காக பஸ் ஸ்டாண்ட் பின் புறம் சென்றார். அப்போது, அவரை பின் தொடர்ந்த ஒருவர் முனியப்பன் பையை பறித்துகொண்டு ஓடினார். முனியப்பன் கூச்சலிட்டதும், அப்பகுதியிலுள்ளவர்கள் பையை பறித்து கொண்டு ஓடியவரை மடக்கி பிடித்து தர்மபுரி டவுன் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சூர் குரும்பர் கொட்டாயை சேர்ந்த விஸ்வநாதன் மகன் விஜியகுமார் (41) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து நான்கு பவுன் நகை மற்றும் 10,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us