Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/முதல்வர் தனிப்பிரிவு மனுவைக் காண்பித்து கொலை மிரட்டல்: பஞ்., தலைவர் மீது புகார்

முதல்வர் தனிப்பிரிவு மனுவைக் காண்பித்து கொலை மிரட்டல்: பஞ்., தலைவர் மீது புகார்

முதல்வர் தனிப்பிரிவு மனுவைக் காண்பித்து கொலை மிரட்டல்: பஞ்., தலைவர் மீது புகார்

முதல்வர் தனிப்பிரிவு மனுவைக் காண்பித்து கொலை மிரட்டல்: பஞ்., தலைவர் மீது புகார்

ADDED : ஆக 11, 2011 11:57 PM


Google News

நாமக்கல்: 'முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவை காண்பித்து, கொலை மிரட்டல் விடுத்த பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சின்னமுதலைப்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட விபரம்: சின்னமுதலைப்பட்டி பஞ்சாயத்து தலைவராக லோகநாதன் உள்ளார்.

அவர், தி.மு.க.,வைச் சேர்ந்தவர். கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்று அனுப்பினேன். அதில், சின்னமுதலைப்பட்டி பஞ்சாயத்து தலைவர், வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்தது குறித்து குறிப்பிட்டிருந்தேன். அந்த புகார் மனு குறித்து உடனடியாக விசாரணைக்கு பரிந்துரை செய்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பஞ்சாயத்து அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு பஞ்சாயத்து தலைவர் லோகநாதன் இருந்தார். அவர், முதல்வர் தனிப்பிரிவுக்கு நான் அனுப்பிய புகார் மனுவை காண்பித்து, 'நீ என் மீது அனுப்பிய புகார் மனு இதுதானே, நன்றாக பார்' எனக் காண்பித்தார். அதை வாங்கிப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மேலும், முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனு எப்படி கிடைத்தது எனக் கேட்டபோது, 'எனக்கு வேண்டிய போலீஸ் துறையை சேர்ந்தவர்கள், என்னுடைய வீட்டுக்கு வந்து மனுவை தந்துவிட்டார்கள். என் மீது யார் புகார் செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.



ஏனெனில், போலீஸ் மற்றும் அரசுத் துறையில் உள்ளவர்கள் மிகவும் வேண்டப்பட்டவர்கள். ஏற்கனவே உன் மீது பொய் வழக்கு போட்டும் அடங்காமல் உள்ளாய். இதோடு இப்பிரச்னையை நிறுத்திக் கொள். இல்லையெனில் உன்னையும், உன் குடும்பத்தாரையும் கொலை செய்யாமல் விடாமாட்டேன்' என, எச்சரித்து தகாத வார்த்தைகளால் மிரட்டினார். எனவே, கொலை மிரட்டல் விடுக்கும் பஞ்சாயத்து தலைவர் லோகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என்னையும், எனது குடும்பத்தாரையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us