Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/3,000 லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு திருச்சியில் வெளிமாநில லாரி நிறுத்தம்

3,000 லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு திருச்சியில் வெளிமாநில லாரி நிறுத்தம்

3,000 லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு திருச்சியில் வெளிமாநில லாரி நிறுத்தம்

3,000 லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்பு திருச்சியில் வெளிமாநில லாரி நிறுத்தம்

ADDED : ஆக 17, 2011 02:12 AM


Google News
திருச்சி: தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளுக்கான நுழைவு வரி உயர்த்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்த ஸ்டிரைக் காரணமாக நேற்றே திருச்சி மாவட்டத்தில் லாரிகள் நிறுத்தப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளுக்கான நுழைவு வரி உயர்வை ரத்து செய்யவேண்டும், டீசல் விலையை குறைக்கவேண்டும், இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கம், நாளை (18ம் தேதி) முதல் லாரிகள் ஓடாது என்று அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மூன்று லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கும் என்று தெரிகிறது. லாரி ஸ்டிரைக்குக்கு பல்வேறு லாரி உரிமையாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால், லாரி போக்குவரத்து 18ம் தேதி முழுமையாக இருக்காது என்று தெரிகிறது. திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ளது. இதில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வெளிமாநிலங்களுக்கும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்துக்குள்ளேயும் இயக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து வெளிமாநிலம் செல்லும் லாரிகள் நேற்றே ஸ்டிரைக்கில் பங்கேற்பதற்காக நிறுத்தப்பட்டது. திருச்சி இ.பி., ரோட்டில் ஸ்டிரைக்கில் பங்கேற்கும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்துக்குள்ளேயே ஓடும் லாரிகள் நாளை மாலைக்குள் நிறுத்தப்படும். அதன்பின் லாரி போக்குவரத்து இருக்காது. லாரி ஸ்டிரைக்கால் திருச்சி மார்க்கெட்டுக்கு வெளிமாநிலத்திலிருந்து வரவேண்டிய காய்கறிகளும், மற்ற மாவட்டங்களிலிருந்து வரவேண்டிய காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவை வருவது பாதிக்கப்படும். இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் லாரி ஸ்டிரைக் குறித்து, மாவட்ட லாரி உரிமையாளர் சங்க செயலாளர் பிரபாகரன் கூறுகையில், ''திருச்சியிலிருந்து வெளிமாநிலம் செல்லும் லாரிகள் இன்றே (நேற்றே) நிறுத்தப்பட்டது. மற்ற லாரிகள் இன்று மாலை வரை ஓடும். அதன்பின் அவையும் ஸ்டிரைக்கில் பங்கேற்கும் விதமாக நிறுத்தப்படும். ஏற்கனவே நடந்த ஸ்டிரைக்கின் போது அரசு எங்கள் கோரிக்கையை ஏற்பதாக உறுதி அளித்தது. அதன்பேரில் அப்போது ஸ்டிரைக் வாபஸானது. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவேதான் மீண்டும் போராட்டம் துவங்க முடிவு செய்துள்ளோம். இம்முறை கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே ஸ்டிரைக் முடிவுக்கு வரும். அதுவரை போராட்டம் தொடரும்,'' என்று கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us