/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேசிய யோகா போட்டி ஆக., 6ல் துவக்கம்தேசிய யோகா போட்டி ஆக., 6ல் துவக்கம்
தேசிய யோகா போட்டி ஆக., 6ல் துவக்கம்
தேசிய யோகா போட்டி ஆக., 6ல் துவக்கம்
தேசிய யோகா போட்டி ஆக., 6ல் துவக்கம்
ADDED : ஆக 03, 2011 01:25 AM
கோவை : தேசிய அளவிலான யோகாசன போட்டி வரும் 6ம் தேதி பெர்க்ஸ் பள்ளியில் நடக்கிறது.
கோவை ஸ்ரீவாரகி மந்த்ராலயம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீமகா சங்கீத அறக்கட்டளை சார்பில் ஐந்தாவது அனைத்து மாநில யோகாசன போட்டி சிங்காநல்லூரில் உள்ள பெர்க்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடக்கிறது. காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடக்கும் போட்டியில் பள்ளி, கல்லூரி, அங்கீகரிக்கப்பட்ட யோகா மையங்களிலிருந்து பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஆறு பிரிவுகளாக போட்டிகள் நடக்கின்றன. முதல் பிரிவில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு; இரண்டாவது பிரிவில் மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு; மூன்றாவது பிரிவில் ஐந்தாம், ஆறாம் வகுப்பு; நான்காவது பிரிவில் ஏழாம், எட்டாம் வகுப்பு; ஐந்தாவது பிரிவில் ஒன்பதாம் வகுப்பு, 10ம் வகுப்பு; ஆறாவது பிரிவில் பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு. கல்லூரி மாணவ, மாணவியருக்கென 18 வயது முதல் 22 வயது வரையிலும், பொதுப் பிரிவில் 23 முதல் 26 வயது வரையிலும் என பல வகை பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயரை வரும் ஐந்தாம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவரமறிய மொபைல்: 92444 21389, 93457 94640, 95668 65383 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்து.