/உள்ளூர் செய்திகள்/கரூர்/பள்ளி டிரைவருக்கான விழிப்புணர்வு முகாம் :ஐ.டி., கார்டு அவசியம்: கரூர் ஆர்.டி.ஓ., "கறார்'பள்ளி டிரைவருக்கான விழிப்புணர்வு முகாம் :ஐ.டி., கார்டு அவசியம்: கரூர் ஆர்.டி.ஓ., "கறார்'
பள்ளி டிரைவருக்கான விழிப்புணர்வு முகாம் :ஐ.டி., கார்டு அவசியம்: கரூர் ஆர்.டி.ஓ., "கறார்'
பள்ளி டிரைவருக்கான விழிப்புணர்வு முகாம் :ஐ.டி., கார்டு அவசியம்: கரூர் ஆர்.டி.ஓ., "கறார்'
பள்ளி டிரைவருக்கான விழிப்புணர்வு முகாம் :ஐ.டி., கார்டு அவசியம்: கரூர் ஆர்.டி.ஓ., "கறார்'
ADDED : ஜூலை 14, 2011 12:32 AM
கரூர்: ''பள்ளி வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட வாகன அடையாள அட்டை (ஏ.வி.டி) பள்ளி நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டும்.
இந்த அடையாள அட்டை இல்லாத வாகன பர்மிட் ரத்து செய்யப்படும்,'' என கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி பள்ளி வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்காக விழிப்புணர்வு முகாமில் எச்சரிக்கை விடுத்தார். பள்ளி வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்காக விழிப்புணர்வு முகாம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடந்தது. கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வாசு முன்னிலை வகித்தார். இதில் 100க்கும் அதிகமான தனியார் பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்கள் பங்கேற்றனர். வட்டார போக்குவரத்து அதிகாரி ராமசாமி பேசியதாவது: பள்ளி வாகனம் ஓட்டும் டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய 10 விதிமுறைகளை உச்ச நீதிமன்றம வரைறை செய்துள்ளது. அதன்படி, டிரைவர்கள் நடந்து கொள்ள வேண்டும். பள்ளி நிர்வாகம் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பது போல், பள்ளி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். கடந்தாண்டு கரூர் நடந்த இரு விபத்துகளில் கதவு சரியாக மூடப்படாமல் விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி நடந்துள்ளது.பள்ளி வாகனங்களில் இரட் டை தாழ்ப்பாழ் முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். வாகனங்களில் தீத்தடுப்பு சாதனம் வைத்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் வாகனங்களை பராமரிக்க பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக மொபைல் ஃபோன் பேசக்கூடாது. ஆனால், நிறைய பேர் வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோன் பயன்படுத்துகின்றனர். டிரைவர்களே இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். குழந்தை கடத்தல் போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அர சு உத்தரவு வெளியிட்டுள்ளது. இதில், பள்ளி வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட வாகன அடையாள அட் டை (ஏ.வி.டி) பள்ளி நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டும். இதில், டிரைவரின் ஃபோட் டோ, இதில் போலீஸ் அதிகாரியின் சான்றொப்பம், அதோடு வட்டார போக்குவரத்து அதிகாரியின் மேலொப்பம் பெறப்பட்டு, வாகனத்தின் உள்ளே வைக்கப்பட வேண்டும். இந்த ஏ.வி.டி., அனுமதி சீட்டு இல்லாத பள்ளி வாகனம் விதிமுறைகளுக்கு புறம்பாக இயக்கப்படுவதாக கருதி டிரைவர் லைசென்ஸ், வாகன அனுமதி (பர்மிட்) ரத்துசெய்யப்படும் நிலை ஏற்படும். இதுகுறித்த விண்ணப்பம் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும். வாகனங்களுக்கு இன்சூரன்ஸ், ஆர்.சி.,புத்தகம், டிரைவர் லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வாகனம் ஓட்டுபவர்கள் காக்கி சீருடை தான் அணிய வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு சீருடையை அணிவதை தவிர்க்க வேண்டும். அதிக வேகமாக வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளை ஏற்றி, இறக்கி, ரோட்டை கடந்து செல்லும் வரை உதவியாளர்கள் உடன் இருக்க வேண்டும். கரூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக தொடர்ந்து செயல்பட ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வாசு பேசியதாவது:
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம், வீட்டிலிருந்து வரும் குழந்தை மீண்டும் வீட்டுக்கு செல்லும் வரை பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பு. இதை உறுதி செய்ய வேண்டும். முன்பின் தெரியாதவர்களை வாகனத்தின் டிரைவராக நியமிக்க கூடாது. குழந்தைகள் பாதுகாப்பது சம்பந்தமாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பல்வேறு பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள் பஙகேற்றனர்.


