Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு

ADDED : ஆக 03, 2011 10:39 PM


Google News
திருப்பூர் : ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையினருக்கான மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு இரண்டு வார மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. ஆடை வடிவமைப்பு, பேட்டர்ன் தயாரிப்பு, கட்டிங், மார்க்கிங், கிரேடிங், தையல் வகைகள், புரொடக்ஷன் பிளானிங் மற்றும் கண்ட்ரோல் மற்றும் தயாரிப்பு மேம்பாடு குறித்து ஒரு பயிற்சியும், கார்மெண்ட் தயாரித்தல், துணி தரம் அறிதல், பேஷன் போர்காஸ்டிங், விலை நிர்ணயம், மெர்ச்சண்டைசிங் உள்ளிட்ட பிரிவுகளில் ஒரு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளில் சேர குறைந்த பட்சம் 10ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே சேர்க்கப்படுவர். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், 98404 30051 மற்றும் 91500 01797 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us