Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழநி கோயில் ஊழியர், வக்கீல்கள் மோதல்:கேமரா பதிவு காட்சி வெளியீடு

பழநி கோயில் ஊழியர், வக்கீல்கள் மோதல்:கேமரா பதிவு காட்சி வெளியீடு

பழநி கோயில் ஊழியர், வக்கீல்கள் மோதல்:கேமரா பதிவு காட்சி வெளியீடு

பழநி கோயில் ஊழியர், வக்கீல்கள் மோதல்:கேமரா பதிவு காட்சி வெளியீடு

ADDED : ஜூலை 27, 2011 01:19 AM


Google News

பழநி: பழநி கோயிலில் வக்கீல்களை தாக்கியதாக, ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரோடு மறியல் செய்தனர்.

இதனால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. பழநியைச் சேர்ந்த வக்கீல்கள் மணிகண்டன் (35), கார்த்திகேயன் (31), நேற்று முன்தினம் இரவு 10.40 மணிக்கு மலைக்கோயில் சென்றனர். தரிசனத்தின் போது கோயில் ஊழியர்களுக்கும், வக்கீல்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். வக்கீல் மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். நேற்று காலை வக்கீல்கள், சங்க துணை தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் சப் கோர்ட் முன், மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் ரோட்டில் போக்குவரத்து பாதித்து, பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். கோயில் இணை கமிஷனர் ராஜா, வக்கீல்களிடம் வருத்தம் தெரிவித்தார். ஆனால், உதவி கமிஷனர் நடராஜன், பேஷ்கார் முருகேசன், அலுவலக உதவியாளர் நாகராஜன், தனியார் செக்யூரிட்டி அழகுசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதற்கு இணை கமிஷனர் ஒப்புதல் தெரிவித்ததால், இரண்டு மணி நேர மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், கோயிலில் நடந்த சம்பவங்கள், கருவறை முன் உள்ள கேமராவில் பதிவாகின. இதுகுறித்த 'சிடி' யை கோயில் நிர்வாகம் வெளியிட்டது. வக்கீல்கள், கோயில் ஊழியரை தாக்கியது; பிற ஊழியர்கள் இரு வக்கீல்களை தாக்கும் காட்சிகள் இதில் இருந்தன. துணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கமிஷனர் நடராஜன் கூறுகையில், 'பக்தர்களை விரைவாக அனுப்புவது வழக்கம். இதில் பிரச்னை ஏற்பட்டது,' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us