டிரெய்லர் மீது பைக் மோதி ஒருவர் பலி
டிரெய்லர் மீது பைக் மோதி ஒருவர் பலி
டிரெய்லர் மீது பைக் மோதி ஒருவர் பலி
ADDED : செப் 01, 2011 11:47 PM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே நின்றுகொண்டிருந்த டிரெய்லர் மீது மோட்டார்பைக் மோதியதில் ஒருவர் பலியானார்.
பண்ருட்டி அடுத்த ராயர்பாளையம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் சேட்டு, 39.
இவர் கடந்த 29ம்தேதி இரவு 7 மணியளவில் ராயர்பாளை யத்தில் இருந்து பண்ருட்டி- அரசூர் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண் டிருந்தார். மோட்டார் சைக்கிள் பின்னால் கஞ்ச னூரைச் சேர்ந்த குமரவேல், 37. உட்கார்ந்து சென்றார். அப்போது பொன்னங்குப்பம் சென்ற போது எதிரில் நின்றிருந்த டிராக்டர் டிரெய்லர் மீது மோதியதில் சேட்டு, குமரவேல் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சேட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். குமரவேல் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.