Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல்ஆன்லைன் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல்ஆன்லைன் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல்ஆன்லைன் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல்ஆன்லைன் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம்

ADDED : ஜூலை 30, 2011 01:23 AM


Google News
தூத்துக்குடி:வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மற்றும் புதுப்பித்தலை ஆன்லைன் மூலம் எளிதான முறையில் செய்து கொள்ளலாம் என்று தூத்துக்குடி மா வட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.அனைத்து வேலைவாய் ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaiv aaippu.gov.in என்ற இணையதள ம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்விணையதளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு போன்ற பணிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இன்ஜினியரிங், டாக்டர் மற்றும் பட்டமேற்படிப்பு கல்வித்தகுதி உடைய மனுதாரர்கள் தங்கள் கல்வித்தகுதியினை பதிவு செய்ய இனி மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லத் தேவையில்லை. தங்கள் பதிவுகளை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். மே லும் வீட்டில் உள்ள இணையதள வசதிஉடைய கம்யூட்டரிலோ அல்லது ஏதேனும் இன்டர்நெட் மையங்களி லோ பதிவு செய்யலாம். மே லும் உடனடியாக வேலைவாய்ப்பு அட்டையினை பிரிண்ட் எடுத்துக் கொள்ளல õம். முதன் முறையாக பதிவு செய்பவர்கள் New Registration பகுதியை அணுகி பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் தகுதி மற்றும் புதுப்பித்தல் செய்வோர் அதற்குரிய பகுதியில் க்கு ER NAME என்னும் இடத்தில் தங்கள் பதிவு எண்ணை பதிவு செய்த ஆண்டுடன் இணைத்து ஆண், பெண் என்பதை குறிக்கும் ஆங்கில எழுத்தையும் இø ணத்து பதினாறு இலக்க எண்ணாக மாற்றி பதிய வேண்டும். உதாரணமாக தங்கள் பதிவு எண்.Gs. 2008F 3610 எனில் இதனை MDP.2008F 00003610 எனக் குறிப்பிட வேண்டும். Mஈக என்பது மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக குறியீடு ஆகும். Pass word என்பது தங்களின் கல்விதகுதி சான்றிதழில் உள்ளபடி பிறந்த தேதி ஆகும். இதனை DD/MM/YYYYஎன்னும் வடிவில் குறிப்பிட்டு இணைப்பினை பெற் று பதிவினை மேற்கொள்ளலாம். இது தொடர்பான சந்தேக ங்களை 0461- 2340159 தொட ர்பு கொண்டு கேட்டு பயனடையலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us