/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பள்ளி தாளாளருக்கு பெண்கள் நல மன்றம் விருதுபள்ளி தாளாளருக்கு பெண்கள் நல மன்றம் விருது
பள்ளி தாளாளருக்கு பெண்கள் நல மன்றம் விருது
பள்ளி தாளாளருக்கு பெண்கள் நல மன்றம் விருது
பள்ளி தாளாளருக்கு பெண்கள் நல மன்றம் விருது
ADDED : ஆக 03, 2011 09:59 PM
விருத்தாசலம் : விருத்தாசலம் இன்பேன்ட் பள்ளி தாளாளருக்கு புரட்சி தலைவி பெண்கள் சமூக நல மன்றம் சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சென்னை ராணி சீதை அரங்கத்தில் புரட்சி தலைவி பெண்கள் சமூக நல மன்றம் சார்பில் சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. வாழ்க்கையில் உழைப்பால் உயர்ந்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும் நலிந்த பிரிவினருக்கும் உதவிடும் வகையில் கல்வி, மருத்துவம், சமூக நலம், ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் ஆற்றிய சேவைகளுக்காக பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் விருத்தாசலம் இன்பேன்ட் பள்ளி தாளாளர் விஜயகுமாரிக்கு கல்வி சேவைக்கான சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நீதிபதி நடராஜன் விருது வழங்கி பாராட்டினார்.