/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வழக்குகளை விரைந்து முடிக்க முதன்மை நீதிபதி ஆலோசனைவழக்குகளை விரைந்து முடிக்க முதன்மை நீதிபதி ஆலோசனை
வழக்குகளை விரைந்து முடிக்க முதன்மை நீதிபதி ஆலோசனை
வழக்குகளை விரைந்து முடிக்க முதன்மை நீதிபதி ஆலோசனை
வழக்குகளை விரைந்து முடிக்க முதன்மை நீதிபதி ஆலோசனை
ADDED : ஜூலை 23, 2011 01:09 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது.
ஈரோடு மாவட்டத்தில் நீண்டகாலமாக விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது, கைதாகி ஜாமீனில் செல்லாமல் சிறையிலேயே நீண்டகாலமாக உள்ளவர்கள் வழக்குகளை விரைந்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயசங்கரன் தலைமையில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், அரசு வக்கீல் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து, ஒவ்வொரு மாதமும் ஆலோசனை நடத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 30ம் தேதி வரை, உரிமையியல் மற்றும் குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களில் 29 வழக்குகள் நிலுவையில் உள்ளன; 48 பேர் சிறையில் உள்ளனர். குற்ற வழக்குகள் மட்டும் விசாரிக்கும் நீதிமன்றங்களில் 75 வழக்குகள் நிலுவை, 104 பேர் சிறையில் உள்ளனர். வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயசங்கரன் தலைமை வகித்தார். ஈரோடு கலெக்டர் காமராஜ், திருப்பூர் கலெக்டர் மதிவாணன், ஈரோடு எஸ்.பி., ஜெயச்சந்திரன், திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன், அரசு வக்கீல் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.