/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஸ்ரீமுஷ்ணத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்த முயன்ற கணவர் கைதுஸ்ரீமுஷ்ணத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்த முயன்ற கணவர் கைது
ஸ்ரீமுஷ்ணத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்த முயன்ற கணவர் கைது
ஸ்ரீமுஷ்ணத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்த முயன்ற கணவர் கைது
ஸ்ரீமுஷ்ணத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்த முயன்ற கணவர் கைது
ADDED : ஆக 03, 2011 10:04 PM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே மனைவியை தீயிட்டு கொளுத்த முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த நாச்சியார்பேட்டை காலனியை சேர்ந்தவர் தியாகராஜன். 25;. கூலித்தொழிலாளி. இவருக்கும் மாமங்கலத்தை சேர்ந்த சுதா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுதா தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தியாகராஜன், சுதாவிடம் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சுதா மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த தியாகராஜன் சுதாவின் மீது தீக்குச்சியை கொளுத்தி போட்டதால் உடல் முழுவதும் தீ பிடித்தது. வலி தாங்க முடியாமல் சுதா அலறியதால் அருகில் இருந்தவர்களால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.