/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக மக்கள் குற்றச்சாட்டுதரமற்ற முறையில் சாலை அமைப்பதாக மக்கள் குற்றச்சாட்டு
தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக மக்கள் குற்றச்சாட்டு
தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக மக்கள் குற்றச்சாட்டு
தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக மக்கள் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், சிமென்ட் சாலை தரமாக அமைக்க வேண்டும் என்று கூறி, பொது மக்கள், பணியை தடுத்து நிறுத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைக் கண்டு, மக்கள் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தரமற்ற முறையில் சாலை அமைக்கக் கூடாது எனக் கூறி, சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, ஜெகன் என்பவர் கூறியதாவது: சிமென்ட் சாலை அமைப்பதற்கு முன், சாலையில் மணல் கொட்டி, அதன் மேல் சிமென்ட் கலவை கலந்த ஒன்றரை ஜல்லியைக் கொண்டு சாலை அமைக்க வேண்டும். அதன் பிறகு, சிமென்ட் கலவை கலந்த முக்கால் ஜல்லி போட வேண்டும். ஆனால், ஒன்றரை ஜல்லி முறையாகப் போடாமல், சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது. பள்ளமாக இருந்த இடங்களில் மட்டும், ஒன்றரை ஜல்லி போட்டனர். அதிலும், சிமென்ட்டிற்கு பதிலாக வெறும் மணல் மட்டுமே இருந்தது. முக்கா ஜல்லியுடன், குறைந்த சிமென்ட் மற்றும் ஜல்லி மணலைக் கொட்டி சாலை அமைக்கின்றனர். சிமென்டிற்கு பதிலாக, ஜல்லி மணல் கொட்டுவது தவறானது. எனவே, சிமென்ட் கலந்து, சாலை அமைக்கும்படி கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ''தரையில், ஆற்று மணலுக்கு பதிலாக, ஜல்லி மணலை கொட்டியதாகவும், அதை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், ஒப்பந்ததாரர் தெரிவித்தார். எனினும், ஊழியர்களை உடனிருந்து, தரமான முறையில் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்,'' என்றார்.