/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/பார்த்தினீயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிபார்த்தினீயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பார்த்தினீயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பார்த்தினீயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பார்த்தினீயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 24, 2011 01:20 AM
அரியலூர்: அரியலூரில் பார்த்தினீயம் செடி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீமை ஏற்படுத்தகூடிய பார்த்தினீய செடி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, அரியலூரில் நேற்று நடந்தது. அரியலூர் மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் உத்தரவுபடி, அரியலூர் காமராஜர் திடலில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை, டி.ஆர்.ஓ., பூங்கொடி கொடியசைத்து துவக்கி வைத்தார். பார்த்தினீயம் செடிகளை அடிப்பதற்கான வழிமுறைகளை விளக்கி நடத்தப்பட்ட இப்பேரணி, காமராஜர் திடலில் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக அரியலூர் பஸ் பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை வளாகத்தை அடைந்தது. இப்பேரணியில் வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சங்கர வடிவேல், வேளாண்மை துணை இயக்குநர் அண்ணாதுரை, உதவி இயக்குநர்கள் பெரம்பலூர் செந்தமிழ் செல்வன், ஆலத்தூர் இளங்கோவன், ஜெயங்கொண்டம் பழனிசாமி, தா.பழூர் ராஜாங்கம், திருமானூர் லதா, வேளாண்மை அலுவலர்கள் மோகன், சுப்ரமணியன், சாந்தி, அருள்ராஜ், கலைச்செல்வி, சவீதா, சுகந்தி, துணை வேளாண்மை அலுவலர்கள் அப்பாவு, துரைராஜ், உலகநாதன், காசிநாதன், சொக்கலிங்கம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், கால்நடைதுறை, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பண்ணை இல்ல ஒலிபரப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 'அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு பஞ்சாயத்து யூனியன் பகுதிகளிலும், பார்த்தினீயம் செடி அழிப்பு முகாம் கடந்த 20ம் தேதி துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது' என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் கூறினார்.


