Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நான்குநேரியில் காங்.,செயல்வீரர்கள் கூட்டம்

நான்குநேரியில் காங்.,செயல்வீரர்கள் கூட்டம்

நான்குநேரியில் காங்.,செயல்வீரர்கள் கூட்டம்

நான்குநேரியில் காங்.,செயல்வீரர்கள் கூட்டம்

ADDED : ஆக 22, 2011 02:23 AM


Google News
நான்குநேரி:நான்குநேரியில் காங்.,செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.நான்குநேரி வட்டார காங்., கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் வட்டார தலைவர் பண்டாரம் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட காங்.,செயலாளர் சுவாமிநாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.,வசந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் லோக்சபா இளைஞர் காங்., தலைவர் துரை, சட்டசபை இளைஞர் காங்.,தலைவர் காமராஜ், காங்., நிர்வாகிகள் லக்கான் (எ) லெட்சுமணன், அழகியநம்பி, முத்துப்பாண்டி, முத்துகிருஷ்ணன், சுடலைக்கண்ணு, இசக்கிமுத்து, கிழக்கு வட்டார தலைவர் ஞானராஜ், களக்காடு தலைவர் தனபால் உட்பட பலர் பேசினர். நகர தலைவர் செல்லப்பாண்டி நன்றி கூறினார்.கூட்டத்தில் நான்குநேரியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல மத்திய அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது. பெருமாள் கோயில் அருகில் யூனியன் காலியிடத்தில் கல்யாண மண்டபம் கட்ட வேண்டும். நான்குநேரி டவுன் பஞ்.,சில் உள்ள சாக்கடை, வாறுகாலை சீர்செய்ய வேண்டும். சிமென்ட் ரோடுகளை செப்பனிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் காங்., நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us