/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உளுந்தூர்பேட்டையில் லாரி டிரைவர் மர்ம சாவுஉளுந்தூர்பேட்டையில் லாரி டிரைவர் மர்ம சாவு
உளுந்தூர்பேட்டையில் லாரி டிரைவர் மர்ம சாவு
உளுந்தூர்பேட்டையில் லாரி டிரைவர் மர்ம சாவு
உளுந்தூர்பேட்டையில் லாரி டிரைவர் மர்ம சாவு
ADDED : ஆக 22, 2011 12:17 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
திருக்கோவிலூர் அடுத்த மேமாளூரை சேர்ந்தவர் ரகோத்தமன். லாரி உரிமையாளர். இவரிடம் சேலம் மாவட்டம் தெடாவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி,35 என்பவர் லாரி டிரைவராக பணி புரிந்து வந்தார். கடந்த 19ம் தேதி ஆத்தூரில் இருந்து லாரியை ஓட்டிச் சென்ற ராமசாமி, பண்ருட்டியில் நிறுத்திவிட்டு, உளுந்தூர்பேட்டைக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள குட்டையில் ராமசாமி காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ரகோத்தமன் போலீசில் புகார் செ#தார். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று ராமசாமியின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


