/உள்ளூர் செய்திகள்/தேனி/சின்னம் தெரியவில்லை வேட்பாளர் பிரசார தாமதம்சின்னம் தெரியவில்லை வேட்பாளர் பிரசார தாமதம்
சின்னம் தெரியவில்லை வேட்பாளர் பிரசார தாமதம்
சின்னம் தெரியவில்லை வேட்பாளர் பிரசார தாமதம்
சின்னம் தெரியவில்லை வேட்பாளர் பிரசார தாமதம்
ADDED : அக் 01, 2011 09:53 PM
ஆண்டிபட்டி : வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கப்படாததால் வேட்பாளர்கள் முன்கூட்டியே தங்கள் பிரசாரத்தை துவக்குவதில் குழப்பம் ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள், அதற்கான வார்டுகள், 19 ஒன்றிய கவுன்சில்கள், இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஒரு பேரூராட்சி, 18 பேரூராட்சி வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., காங்., கம்யூ., கட்சிகளைச்சேர்ந்த வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கட்சி சார்ந்துள்ள வேட்பாளர்களுக்கு சின்னம் உறுதியாகி விட்டாலும், சுயேட்சை வேட்பாளர்கள், ஊராட்சி தலைவர், வார்டுகளில் போட்டியிடுபவர்களுக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதியானாலும், முன்கூட்டியே பிரசாரம் செய்ய செல்லும்போது சின்னத்தின் பெயரை குறிப்பிட முடியவில்லை. வார்டுகளில் உள்ள சொந்தபந்தங்கள், வீடுகளுக்கு சென்று ஆதரவு கேட்டாலும் சின்னம் பெயர் குறிப்பிட முடியாமல் குழப்பம் ஏற்படுகிறது.


