/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குடிநீர் சரியாக வினியோகம் செய்யாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்குடிநீர் சரியாக வினியோகம் செய்யாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் சரியாக வினியோகம் செய்யாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் சரியாக வினியோகம் செய்யாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் சரியாக வினியோகம் செய்யாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : ஆக 22, 2011 10:59 PM
நெகமம் : நெகமம் அடுத்துள்ள சிறுக்களந்தை ஊராட்சியில், அம்பராம்பாளையம் குடிதண்ணீர் சரியாக வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெகமம் அடுத்துள்ள சிறுக்களந்தை ஊராட்சியில் இரண்டு போர்வெல்கள் உள்ளன. இதில் ஒரு போர்வெல்லில் தண்ணீர் வற்றிவிட்டது. மற்றொரு போர்வெல்லில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால், அம்பராம்பாளையம் குடிதண்ணீரை தவிர வேறு குடிதண்ணீர் ஆதாரம் எதுவும் இல்லை. இந்நிலையில், குடிநீர் பணியாளர் சரிவர தண்ணீர் வினியோகம் செய்யாமல் இருந்ததால், பொதுமக்கள் குடிப்பதற்கும், அன்றாட தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து ஊராட்சித்தலைவர் சாந்தலிங்கத்திடம் புகார் செய்தனர். ஊராட்சி மன்றத்தலைவரும் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., வுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் இதுகுறித்து தெரிவித்தார். இருப்பினும், தண்ணீர் வினியோகம் சீராக இல்லை. போர்வெல்லில் உள்ள மோட்டார் பழுதும் சரிசெய்யப்படவில்லை. இதனால், கோபமான பொதுமக்கள் நேற்று காலை 8.30 மணியளவில், பொள்ளாச்சி, பல்லடம் செல்லும் மெயின்ரோட்டின் குறுக்கே அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பொள் ளாச்சி தாசில்தார் சின்னபையன், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., விஜய்சங்கர், வருவாய் ஆய்வாளர் சசிரேகா, நெகமம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பணியாளர் மீது பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். இவரை மாற்றக்கோரியும் கோரிக்கை விடுத்தனர். பழுதடைந்த மின்மோட்டாரை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தனர். பொள்ளாச்சி தாசில்தார், குடிநீர் பணியாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். அடுத்த முறை இவ்வாறு நடந்தால், தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார். போர்வெலில் உள்ள மின்மோட்டாரை மூன்று நாட்களுக்குள்ளாக பழுது பார்க்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என பி.டி.ஓ., விஜய்சங்கர் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் காலை 9 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.