/உள்ளூர் செய்திகள்/மதுரை/அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட கோர்ட் மறுப்புஅட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட கோர்ட் மறுப்பு
அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட கோர்ட் மறுப்பு
அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட கோர்ட் மறுப்பு
அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட கோர்ட் மறுப்பு
ADDED : ஜூலை 28, 2011 03:31 AM
மதுரை : மதுரையில் வீட்டை அபகரித்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ்
தொடர்ந்த 2வது வழக்கிலும் தி.மு.க., விவசாய விற்பனை குழு முன்னாள் தலைவர்
அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட ஆறாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்
டி.சுஜாதா மறுத்து விட்டார்.மதுரை தெற்கு வெளி வீதியை சேர்ந்த எல்.ஐ.சி.,
அதிகாரி பிருத்விராஜ்.
இவரது வீட்டை அபகரிக்க முயன்றதாக அட்டாக் பாண்டி
உட்பட சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இவ்வழக்கில் விசாரிக்க வேண்டி அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட கோரி
இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், கோர்ட்டில் மனு செய்தார். இதற்கு அட்டாக் பாண்டி
வக்கீல்கள் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ, மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று போலீஸ் காவல் விட கோரிய மனுவை மாஜிஸ்திரேட் டி.சுஜாதா தள்ளுபடி
செய்தார்.சீராய்வு மனு: ஏற்கனவே சொக்கிகுளத்தை சேர்ந்த கல்பனா என்பவரது
வீட்டை அபகரிக்க முயன்ற வழக்கில் அட்டாக் பாண்டியை போலீஸ் காவலில் விட
முதலாவது மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் மறுத்து விட்டார். அதை எதிர்த்து
இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தாக்கல் செய்த சீராய்வு மனு நேற்று நீதிபதி
ஆர்.மாலா முன் ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல்
வக்கீல் சி.ரமேஷ் ஆஜரானார். மனு மீதான விசாரணையை இன்றைக்கு நீதிபதி
தள்ளிவைத்தார்.திருமங்கலத்தை சேர்ந்த சிவனாண்டி, மனைவி பாப்பா நிலத்தை
அபகரித்த வழக்கில் தி.மு.க., நகர செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு
உறுப்பினர் பொட்டுசுரேஷ் (சுரேஷ்பாபு), திருமங்கலம் யூனியன் சேர்மன்
கொடிசந்திரசேகர், திருப்பரங்குன்றம் நகர செயலாளர் கிருஷ்ணபாண்டியன் ஆகியோரை
போலீஸ் காவலில் விட மறுத்து மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. அதை
எதிர்த்து போலீஸ் சார்பில் தாக்கலான சீராய்வு மனுவும் இன்று ஐகோர்ட்
கிளையில் விசாரணைக்கு வருகிறது.