ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சிக்னல் பழுதானதால், செங்கோட்டை பாசஞ்சர் ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக ராஜபாளையம் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு சென்றது.
செங்கோட்டை- மதுரை செல்லும் பாசஞ்சர் ரயில், தினமும் காலை 8.20 மணிக்கு ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் வரும். ஐந்து நிமிடங்களில் புறப்படும் இந்த ரயில், சிக்னல் பழதானதால் நேற்று காலை 8.45 ஆகியும் புறப்படவில்லை. சிக்னல் இன்ஜினியர் ஷேக் முகமது, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஸ்டேஷன் மாஸ்ட் ராஜா உசேன் மற்றும் ரயில்வே ஊழியர்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்பின், 45 நிமிடங்கள் தாமதமாக 9.30 க்கு ரயில் புறப்பட்டது. இதனால், ஸ்டேஷன் அருகே இருந்த மலையடிப்பட்டி ரயில்வே கேட்டும் திறக்கப்படாமல், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுபாதை இல்லாததால், மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''முதல் பிளாட்பாரத்தில் வந்த ரயில், கிளம்ப தயாரானபோது 'பாய்ன்ட்' அடிப்பதில் பிரச்னை ஏற்பட்டு, சிக்னல் பழுதானது. அரைமணிநேரத்தில் பழுதுநீக்கப்பட்டு ரயில் புறப்பட்டது,'' என்றனர்.