/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/முத்தூட் நிறுவனத்தில் நகை கொள்ளை: ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணைமுத்தூட் நிறுவனத்தில் நகை கொள்ளை: ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
முத்தூட் நிறுவனத்தில் நகை கொள்ளை: ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
முத்தூட் நிறுவனத்தில் நகை கொள்ளை: ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
முத்தூட் நிறுவனத்தில் நகை கொள்ளை: ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர் : முத்தூட் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளையில் ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.திருப்பூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கடந்த 24ம் தேதி காலை புகுந்த கொள்ளையர்கள், 1,381 சவரன் நகை மற்றும் 2.36 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தொடர்ந்து, லாக்கரை திறந்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் குறிப்பிட்ட நகைகளை மட்டும் எடுத்துள்ளனர்.எனவே, கொள்ளையர்களுக்கு, முத்தூட் மினி நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு அறை அமைப்பு குறித்த முன்னதாக அனைத்து விபரங்களும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அரை மணி நேரத்தில் எளிதாக கொள்ளையர்கள் கொள்ளையை அரங்கேற்றியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதே போல் 9.15 மணிக்குள் கொள்ளை நடந்து, கொள்ளையர்களால் கட்டி வைக்கப்பட்ட ஊழியர்கள் ஜன்னலை திறந்து உதவிக்கு மற்றவர்களை அழைத்ததாகவும், முக்கால் மணி நேரம் கழித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், போலீஸ் செக்போஸ்ட்கள் 'அலர்ட்' செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.கொள்ளைக்கு பயன்படுத்திய கத்தி, கயிறு மற்றும் பனியன் வேஸ்ட் துணிகள் என அனைத்தும் புதிதாக இருந்துள்ளது.எனவே, ஊழியர்கள் யாராவது இதற்கு உடந்தையாக இருந்திருக்கலாமா; முன்பு பணியாற்றிய அல்லது இதே லாக்கிங் சிஸ்டம் உள்ள வேறு அலுவலகத்தில் பணியாற்றிவர்களா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. வன்னியப்பெருமாள், கோவை சரக டி.ஐ.ஜி., பாலநாகதேவி நேற்று திருப்பூர் வந்தனர். முத்தூட் கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரிடம் ஆலோசனை நடத்தினர்.