/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/மனநலம் பாதித்த பெண் மாயம் திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் மீட்புமனநலம் பாதித்த பெண் மாயம் திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் மீட்பு
மனநலம் பாதித்த பெண் மாயம் திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் மீட்பு
மனநலம் பாதித்த பெண் மாயம் திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் மீட்பு
மனநலம் பாதித்த பெண் மாயம் திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் மீட்பு
ADDED : செப் 13, 2011 12:48 AM
மன்னார்குடி: மன்னார்குடி வசந்தம் நகரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒன்பது பவுன் நகைகளுடன் பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்து மாயமானார்.
அவரை திருவாரூரிலிருந்து போலீஸார் மீட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வசந்தம் நகரை சேர்ந்தவர் வீரசேனன் (39). இவர் சிவில் கான்டிராக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வராணி (35). கடந்த எட்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. செல்வராணி புத்தி சுவாதீனம் இல்லாத பெண் என்பதால் வீரசேணன் தனது தாயாரான சகுந்தலாவிடம் மனைவியை விட்டு, விட்டு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் சென்னையில் குடியேறி அங்கு ஒரு பெண்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சகுந்தலா, செல்வராணி இருவரும் உறவினர் வீட்டு விஷேசத்துக்குச் சென்று விட்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து சென்றனர். அப்போது எதிரே பஸ் வந்தால் இருவரும் பிரிய நேரிட்டது. பஸ் சென்றவுடன் செல்வராணியை காணாமல் திடுக்கிட்டு மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவனிடம் சகுந்தலா நேற்று காலை புகார் கொடுத்தார். புகாரில்ல ஆறு பவுன் தாலி செயின், தோடு, மூக்குத்தி, வளையல் அணிந்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் மதிப்பு இரண்டு லட்சமாகும். இச்சம்பவம் குறித்து மன்னார்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செல்வராணியை பற்றி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவித்தனர். காணாமல் போன செல்வராணி திருவாரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று மதியம் 1 மணியளவில் நின்று கொண்டிருந்தார். திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸார் பார்த்து செல்வராணியை மீட்டு மன்னார்குடி போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். மன்னார்குடி போலீஸார், கணவர் வீரசேனனிடம் செல்வராணியை ஒப்படைத்தனர்.