அரை மணி நேரம் மூடப்பட்ட ரயில்வே கேட்: "குடி'மகனாகிய "கேட் கீப்பர்' சஸ்பெண்ட்
அரை மணி நேரம் மூடப்பட்ட ரயில்வே கேட்: "குடி'மகனாகிய "கேட் கீப்பர்' சஸ்பெண்ட்
அரை மணி நேரம் மூடப்பட்ட ரயில்வே கேட்: "குடி'மகனாகிய "கேட் கீப்பர்' சஸ்பெண்ட்
ADDED : செப் 17, 2011 09:37 PM
விருதுநகர்: விருதுநகரில் ரயில்வே கேட்டை, இரவில் அரை மணி நேரம் பூட்டியபடி, குடிபோதையில் தூங்கிய, 'கேட் கீப்பர்' சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விருதுநகர், ராமமூர்த்தி ரோட்டிலுள்ள ரயில்வே கேட்டில், 'கேட் கீப்பராக' பணிபுரிந்தவர், சண்முகசுந்தரம்,36.
இவர், நேற்று இரவு, தன் நண்பர் ஆரோக்கியம்,35, என்பவருடன், பணி நேரத்தில் குடிபோதையில் இருந்தார். இரவு 12 மணிக்கு, கோவையிலிருந்து நாகர்கோவில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக கேட்டை மூடினார். தொடர்ந்து, மதுரை - கொல்லம் பாசஞ்சர் ரயிலும் சென்றது. அதன் பின், அரை மணி நேரமாகியும், கேட் திறக்கப்படவில்லை. இதனால், கேட்டின் இருபுறமும், ஏராளமான வாகனங்கள் நின்றன. குடிபோதையில் இருந்த, 'கேட் கீப்பர்' தூங்கினார். அப்பகுதியினர், ஸ்டேஷன் மேனேஜருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்த பின், கேட் திறக்கப்பட்டதோடு, இதன் மாற்று பணியாளராக முருகன் என்பவரை நியமித்தார். இதைத் தொடர்ந்து, 'கேட் கீப்பர்' சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆத்திரத்திலிருந்த பொதுமக்கள் தாக்கியதில், ஆரோக்கியம் காயமடைந்தார். சம்பவம் குறித்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், 1.45 மணிக்குப் பின்பே வந்து, கேட்டை திறந்தனர்.