குவின்டாலுக்கு ரூ. 100 குறைந்தது வத்தல் மைதாவும் மூடைக்கு 625 ரூபாய் குறைந்தது
குவின்டாலுக்கு ரூ. 100 குறைந்தது வத்தல் மைதாவும் மூடைக்கு 625 ரூபாய் குறைந்தது
குவின்டாலுக்கு ரூ. 100 குறைந்தது வத்தல் மைதாவும் மூடைக்கு 625 ரூபாய் குறைந்தது
விருதுநகர் : விருதுநகர் மார்க்கெட்டில் மைதாவிலை மூடைக்கு 625 , பொரிகடலை மூடைக்கு 140 ,மிளகாய் வத்தல் குவின்டாலுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது.
நயம் உளுந்தம் பருப்பு 6,400, பர்மா பருவட்டு பருப்பு 5,600 , துவரை 3,900 , பொடி துவரை 3,100 ரூபாயாக உள்ளது. துவரம் பருப்பு 5,700 , பொடி துவரம் பருப்பு 3,600 , பாசிப்பயறு 5,600 , லயன் பருவட்டு 3,900 ,சுமார் ரகம் 3,200 ரூபாயாக உள்ளது. பாசிப்பருப்பு 5,200 , சுமார் ரகம் 4,800 ரூபாயாக உள்ளது. ரவை 2,310 , மைதா 2,875 லிருந்து 2,250 ரூபாயாக குறைந்துள்ளது. கொண்டைக்கடலை 3,200 ,பொரிகடலை 2,280 லிருந்து 2,140ரூபாயாக குறைந்துள்ளது. மிளகாய் பழைய வத்தல் குவின்டாலுக்கு 7,600 லிருந்து 7,500 ரூபாயாக குறைந்துள்ளது. பழைய சோடை வத்தல் 2.200 ரூபாயாக உள்ளது.
' மார்க்கெட்டில் பருப்பு விற்பனை அதிகம் இல்லாததால்,இதன் விலையில் மாற்றம் இல்லை.அதே நேரத்தில் அடுத்த வாரத்தில் கடலை வரத்து துவங்கும் என்பதால், எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது. மிளகாய் வத்தல் வரத்து குறைந்துள்ள நிலையில், புது வத்தல் வரத்து ஆவணியில் துவங்குவதாக ,' வியாபாரிகள் தெரிவித்தனர்.