/உள்ளூர் செய்திகள்/திருச்சி/துறையூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு "உறவு'கள் போட்டியிடுவதால் பரபரப்புதுறையூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு "உறவு'கள் போட்டியிடுவதால் பரபரப்பு
துறையூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு "உறவு'கள் போட்டியிடுவதால் பரபரப்பு
துறையூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு "உறவு'கள் போட்டியிடுவதால் பரபரப்பு
துறையூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு "உறவு'கள் போட்டியிடுவதால் பரபரப்பு
ADDED : அக் 03, 2011 03:02 AM
துறையூர்: துறையூர் நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் அம்மா, மகன், மாமனார், மருமகன், அண்ணன், தங்கை, அண்ணி, கெ õழுந்தன் உறவுகள் வேட்பாளர்களாக களத்தில் குதித்து வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிக்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் வந்தால் உறவுகள் நண்பர்களுக்குள் கூட கருத்து வேறுபாடு வந்துவிடுவது இயல்பு தான்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருந்து போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவர். அதுபோல் பல உறவுகள் துறையூர் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு, வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
துறையூர் நகராட்சி தலைவர் மற்றும் 24 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு எட்டு பேரு ம், கவுன்சிலருக்கு 121 பேரும் வேட்பாளர்களாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அம்மா, மகன் அ.தி.மு.க., தே.மு.தி.க.,விலும், மாமனார், மருமகன் தி.மு.க., தே.மு.தி.க.,விலும், அண்ணன், தங்கை இருவரும் காங்கிரஸிலும், சுயேட்சையாகவும், அண்ணி , கொழுந்தன் உறவுகள் வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளது. வாக்காளர்களை உற்றுநோக்க செய்துள்ளது.
துறையூர் நகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் வசந்தி மனுதாக்கல் செய்துள்ளார். இவரது மகன் சதீஷ் 12வது வார்டு கவுன்சிலருக்கு தே.மு.தி.க.,வில் மனுதாக்கல் செய்துள்ளார். 22வது வார்டில் கவுன்சிலருக்கு தி.மு.க., சார்பில் போட்டியிட மனு செய்துள்ள சுகுமாரின் மருமகன் பாபு தே.மு.தி.க., சார்பில் நகராட்சி தலைவருக்கு போட்டியிடுகிறார். 16வது வார்டில் கவுன்சிலருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சுப்ரமணியனும், 18வது வார்டில் அதே கட்சி சார்பில் போட்டியிடும் ராணியும் அண்ணன், தங்கை ஆவர்.
24வது வார்டில் சுயேட்சைகளாக போட்டியிடும் கவிதா மனோகரின், கணவர் தம்பி அமைதி பாலு 23வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர், தொடர்ந்து மூன்று முறை வெற்றிப்பெற்று கவுன்சிலராக இருந்துள்ளார். தற்போது நான்காவது முறை வேட்பாளராக களத்தில் உள்ளார். இதில், எத்தனை உறவுகள் வென்று நகராட்சி பதவியை கைப்பற்றுவார்கள் என்பது வரும் 21ம் தேதி தெரிந்துவிடும்.


