/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஒரு சில மாதத்திலே சேதமுற்ற வாறுகால், ரோடு : வாகனங்கள் செல்ல முடியாத அவலம்ஒரு சில மாதத்திலே சேதமுற்ற வாறுகால், ரோடு : வாகனங்கள் செல்ல முடியாத அவலம்
ஒரு சில மாதத்திலே சேதமுற்ற வாறுகால், ரோடு : வாகனங்கள் செல்ல முடியாத அவலம்
ஒரு சில மாதத்திலே சேதமுற்ற வாறுகால், ரோடு : வாகனங்கள் செல்ல முடியாத அவலம்
ஒரு சில மாதத்திலே சேதமுற்ற வாறுகால், ரோடு : வாகனங்கள் செல்ல முடியாத அவலம்
விருதுநகர் : விருதுநகரில் 36 லட்சம் செலவில் போடப்பட்ட ரோடு ஒரு சில மாதங்களிலேயே வாறுகால் இடிந்து, குண்டும் குழியாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் வாகனத்தில் செல்வோர், ஆர்.டி.ஓ., ஆபிசில் டிரைவிங் லைசன்ஸ் பெற எட்டு போட வேண்டியது போல் வளைந்து நெளிந்து ஓட்ட வேண்டியுள்ளது. இதை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் உள்ளது. 'நகராட்சி கவுன்சிலர்களும் கான்ட்ராக்டரிடம் தங்களுக்குரிய கமிஷனை பெற்றுக் கொண்டு எதையும் கண்டு கொள்ள வில்லை,' என, இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சப் காண்ட்ரக்டர் சிவக்குமார் கூறியதாவது: தெருவில் 'டாரஸ்' லாரிகள் செல்வதால் வாறுகால் இடிக்கப்பட்டு உடைந்து விட்டது, ரோடும் இறங்கி விட்டது. ஏற்கனவே இது போன்று நிகழ்ந்ததால் மீண்ட ரோடு போட்டு கொடுக்கப்பட்டது , என்றார். வார்டு கவுன்சிலர் வள்ளிக்குட்டி ராஜா கூறுகையில்,''லாரி செல்வதால் சேதம் ஏற்படுகிறது.நான் ஏற்கனவே ரோடு சரியில்லை என எழுதி கொடுத்ததால் மீண்டும் வேலை பார்த்தனர் ,'' என்றார்.


