ADDED : ஆக 23, 2011 04:18 PM
குப்பைக்கிடங்காகியுள்ள கூவம் ஆற்றை சுத்தப்படுத்த முந்தைய தி.மு.க., அரசு ரூ.1260 கோடியில் மிகப்பெரிய திட்டம் தீட்டியது. இதற்காக சிங்கப்பூர் அதிகாரிகளுடன் கடந்த மார்ச் மாதம் சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 3 கட்டமாக இதை நிறைவேற்றும் வகையில் திட்டமிடப்பட்டது.
கூவம் ஆற்றை முதலிலும், பின்னர் அதனை தொடர்ந்து சென்னை நகரின் பிற முக்கிய நீர்வழிகளையும் சேர்த்து சீரமைக்கும் நோக்கத்துடன் அடையாறு பூங்கா அறக்கட்டளை, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என 22.01.2010-ல் மாற்றியமைக்கப்பட்டது. சென்னையிலுள்ள நதிகளை சீரமைக்கும் திட்டங்களை உருவாக்கவும், திட்ட செயலாக்கம் மற்றும் திட்ட முன்னேற்றம் ஆகியவற்றை கண்காணிக்கும் பொருட்டும், அபபோதைய துணை முதல்வர் தலைமையில் குடிசைமாற்று வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சர்கள், மேயர் மற்றும் உயர் அதிகாரிகளை உறுப்பினர்களாக உயர் மட்டக்குழு 25.01.ஆகியது. சென்னை கூவத்தை சீரமைக்கும் பணி 5 முதல் 6 ஆண்டுகளில் முழுமையாக முடிக்க காலம் நிர்ணயிக்கப்பட்டது.2010 அன்று அமைக்கப்பட்டது.
கூவம் சீரமைப்பு பணியின் மொத்த மதிப்பீடு ரூபாய் 1,200 கோடியாகும். சிங்கப்பூர் நதியை சீரமைக்க 10 ஆண்டுகள்.கூவம் நதி சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் மற்றும் சிவானந்தா சாலையில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் சுமார் 730 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் உள்ள கூவம் கரைப்பகுதி கடந்த 8.12.2009 இன்று பொதுப்பணித்துறையால் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ரூபாய் ஒரு கோடியே 35 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. சுவாமி சிவானந்தா சாலையில் அண்ணாலை முதல் காமராஜர் சாலை வரையில் சுமார் 1,200 மீட்டர் நீளத்திற்கும், 5 மீட்டர் அகலத்திற்கும் கூவம் கரைப்பகுதியும் 1.02.2010 அன்று மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு, ரூபாய் 86 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது.
முதன்முதலில் 1970ம் ஆண்டு கூவத்தை சுத்தப்படுத்தி அதில் படகுசவாரி இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தினால் இந்த முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டது. இது தவிர அவ்வப்போது கூவத்தில் ஒரு குறுகிய தூரத்தை சுத்தப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டு, கூவம் சுத்தப்படுத்தும் பணி நடத்தப்பட்டது.
தற்போது அ.தி.மு.க., ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த பிறகு தி.மு.க., அரசு அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டம் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன பாவமோ! யார் கொடுத்த சாபமோ ஒரு அழகான நதி சாக்கடையானது. இந்த சாபத்திற்கு விமோசனம் தான் எப்போது ?


