Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தில் வாகன எண்ணிக்கை 1.36 கோடியாக உயர்வு:விபத்து, உயிரிழப்புகள் அதிகரிப்பு

தமிழகத்தில் வாகன எண்ணிக்கை 1.36 கோடியாக உயர்வு:விபத்து, உயிரிழப்புகள் அதிகரிப்பு

தமிழகத்தில் வாகன எண்ணிக்கை 1.36 கோடியாக உயர்வு:விபத்து, உயிரிழப்புகள் அதிகரிப்பு

தமிழகத்தில் வாகன எண்ணிக்கை 1.36 கோடியாக உயர்வு:விபத்து, உயிரிழப்புகள் அதிகரிப்பு

ADDED : செப் 09, 2011 06:20 AM


Google News

சென்னை:தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், 91.03 லட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, தற்போது, 1.36 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும், 12.37 லட்சம் வாகனங்கள் அதிகரித்துள்ளன.தமிழகத்தில், வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், கடந்த 2006-07ம் ஆண்டில், 6.08 லட்சம் போக்குவரத்து வாகனங்கள், 75.03 லட்சம் டூவீலர்கள், 9.91 லட்சம் இதர வானங்கள் என, மொத்தம் 91.3 லட்சம் வாகனங்கள் இருந்தன. ஐந்து ஆண்டுகளில், 2010-11ம் ஆண்டில், மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, 1.36 கோடியாக அதிகரித்துள்ளது.1இதில், போக்குவரத்து வாகனங்கள் 3.2 லட்சம் அதிகரித்து, 9.28 லட்சமாகவும், டூவீலர்கள் 37 லட்சம் அதிகரித்து, 1.12 கோடியாகவும், இதர வாகனங்கள் 5.2 லட்சம் அதிகரித்து, 15.24 லட்சமாகவும் உயர்ந்துள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும், 12.37 சதவீத வாகனங்கள் உயர்ந்துள்ளன.



உயிரிழப்புகள் அதிகரிப்பு: தமிழகத்தில், கடந்த 2006ம் ஆண்டில் நடந்த மொத்த விபத்துகள் 55,145. இதில், உயிரிழந்தோர் 11,009 பேர். இறப்பு சதவீதம் 12.80 சதவீதமாக இருந்தது. இது, 2007ல், விபத்துகள் - 59,140, உயிரிழப்புகள்- 12,036 ஆகவும் உயர்ந்தது. 2008ல் விபத்துகள்-60,409, உயிரிழப்புகள்- 12,784 ஆகவும் எகிறிது.இதுவே 2009ல், விபத்துகள்-60,794, உயிரிழப்புகள்-13,746 ஆகவும், 2010ல், விபத்துகள்-64,996, உயிரிழப்புகள்-15,409 ஆகவும் உயர்ந்துள்ளன. 2010ம் ஆண்டில் இறப்பு சதவீதம், 12.10 சதவீதமாக உள்ளது. 2011ம் ஆண்டில், மார்ச் மாதத்திற்குள், 16,751 விபத்துகளும், 3,785 உயிரிழப்புகளும் நடந்துள்ளன. வாகனப் பெருக்கத்திற்கேற்ப, விபத்துகளும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us