ADDED : ஜூலை 19, 2011 09:31 PM
பேரூர் : 'சிவாஞ்சலி அறக்கட்டளை' சார்பில், இசை நாட்டிய விழா, வரும் 25ம் தேதி துவங்குகிறது.
கோவை சிவாஞ்சலி அறக்கட்டளையின் கீழ் இயங்கும், 'டெம்பிஸ் ஆப் பைன் ஆர்ட்ஸ்' செயலாளர் காய்த்ரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டெம்பிள் ஆப் பைன் ஆர்ட்ஸ் இசை நாட்டியப் பள்ளி, தற்போது 25 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில், இதன் மாணவர்கள், ஆசிரியர்கள், இசைவல்லுனர்கள் ஒன்றிணைந்து, வரும் 25, 26, 27ம் தேதிகளில் சுவாமி சாந்தானந்த சரஸ்வதி கலைவிழாவில் பங்கேற்கின்றனர். வரும் 25ம் தேதி, மாலை 75 இசைப் படைப்புகளின் அரங்கேற்றம், 26ம் தேதி மாலை, பரதநாட்டியம், ஒடிசி, குச்சுப்புடி ஆகிய நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆர்.எஸ்., புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடக்கும், இந் நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டுகள், வடவள்ளி சிவாஞ்சலி டிரஸ்ட் மற்றும் ரேஸ்கோர்ஸ் அன்ன லட்சுமி ரெஸ்டாரண்டில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு காயத்ரி தெரிவித்தார்.


