/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/இலவச யோகா பயிற்சி நாளை முதல் துவக்கம்இலவச யோகா பயிற்சி நாளை முதல் துவக்கம்
இலவச யோகா பயிற்சி நாளை முதல் துவக்கம்
இலவச யோகா பயிற்சி நாளை முதல் துவக்கம்
இலவச யோகா பயிற்சி நாளை முதல் துவக்கம்
ADDED : ஜூலை 26, 2011 12:35 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஈஷா யோகா மையம் சார்பில், ஏழு நாள் இலவச யோகா பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது.
திருத்துறைப்பூண்டி ஈஷா யோகா மைய ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி கூறியதாவது: வாழ்க்கையை புதிய கோணத்தில் சிந்திக்கவும், உணரச் செய்யவும், நினைவாற்றல், மனகுவிப்புத்திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை சிலவார ஈஷா மைய யோகா பயிற்சிகள் மூலம் 100 சதவீதம் வரை அதிகரிக்க முடியும். யோகா மூலம் நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டு வலி, தலைவலி, சைனஸ், முதுகுவலி, இருதய கோளாறு, உடல் பருமன் மற்றும் தீராத நோய்கள் குணமடையவும், வராமல் தடுக்கவும் முடியும். மிகவும் தொன்மையான 'சாம்பவி மஹாமுத்ரா' பயிற்சி, வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய சக்தி வாய்ந்ததாகும். பயிற்சியில் பங்கேற்க வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களில் எவ்வித மாற்றமும் செய்ய தேவையில்லை. எந்த மதமானாலும், இனமானாலும், பிரிவானாலும், யோகா பயிற்சி மேற்கொள்ள தடையில்லை. திருத்துறைப்பூண்டி மந்தை மஹாலில் நாளை (27ம் தேதி) மாலை ஆறு மணி முதல் இலவச யோகா பயிற்சி துவங்குகிறது.தொடர்ந்து ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.