/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரசு பள்ளியில் முப்பெரும் விழா : பள்ளியை தரம் உயர்த்த நிதி வழங்கல்அரசு பள்ளியில் முப்பெரும் விழா : பள்ளியை தரம் உயர்த்த நிதி வழங்கல்
அரசு பள்ளியில் முப்பெரும் விழா : பள்ளியை தரம் உயர்த்த நிதி வழங்கல்
அரசு பள்ளியில் முப்பெரும் விழா : பள்ளியை தரம் உயர்த்த நிதி வழங்கல்
அரசு பள்ளியில் முப்பெரும் விழா : பள்ளியை தரம் உயர்த்த நிதி வழங்கல்
ADDED : ஜூலை 25, 2011 01:56 AM
அரியலூர்: அரியலூர் அருகேயுள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்துள்ள சோழன்குடிக்காடு அரசு மேல்நிலை பள்ளியில், கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க பரிசு வழங்குதல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.
விழாவுக்கு பள்ளியின் தலை மை ஆசிரியர் ராமலிங்கம் தலை மை வகித்தார்.
பள்ளியின் கட்டிடக் குழு செயலாளர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விஸ்வநாதன், கிராம கல்விக்குழு தலைவர் நீலாவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் மகாலிங்கம், சிவஞானம் அம்மாள் அறக்கட்டளை தலைவர் குமார், செந்துறை வட்டார அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் சிவகுருநாதன், சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் விநாயகம், மகாலிங்கம், ஓய்வு பெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் தியாகராஜன், ஆசிரியர்கள் மணிமுத்து, முருகானந்தம், இள ந்தமிழ் எழில், விமலா, ரேவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், சோழன்குடிக்காடு பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெ ற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ஐந்தாயிரம், மூவாயிரம், இரண்டாயிரம் என ரொக்க பரிசுகளை, சிவஞானம் அம்மாள் அறக்கட்டளை தலைவர் குமார் வழங்கினார். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாண வ, மாணவிகளுக்கும் தலா 500 ரூபாய் மதிப்புள்ள பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசுக்கு செலுத்த வேண்டிய பொதுமக்கள் பங்கு தொகையான இரண்டு லட்ச ரூபாயையும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் 'டெல்டா' நாராயணசாமி வழங்கினார். மேலும், விழாவில் வெளிநாடு வாழ் சோழன்குடிக்காடு கிராம மக்கள் சார்பாகவும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.


